Actor Santhanam: சந்தானத்தையும் டிஆரையும் ஏமாற்றிய கூல் சுரேஷ்.. மேடையில் சந்தானம் வெளிப்படை!

சென்னை: நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படம் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ளது. முன்னதாக டிக்கிலோனா படத்தில் இணைந்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், எம்எஸ் பாஸ்கர், ரவிமரியா, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கூல் சுரேஷ், ஜாக்குலின் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுளள்னர். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரெயிலர், பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பான வகையில் நடைபெற்றது. இதில் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று, படம் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். முன்னதாக படத்தின் ட்ரெயிலர் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சந்தானம் அதுகுறித்தும் பேசினார்.

Actor Santhanam talks about Cool Suresh in Vadakkupatti Ramasamy movie audio launch

நடிகர் சந்தானம்: நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகிவரும் சூழலில் அடுத்ததாக டிக்கிலோனா படத்தின் இயக்குநருடன் இரண்டாவது முறையாக அவர் இணைந்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்தப் படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. முன்னதாக படத்தின் ட்ரெயிலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தின் ட்ரெயிலர் சில சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இன்றைய தினம் இசை வெளியீட்டில் பேசிய நடிகர் சந்தானம், இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

வடக்குப்பட்டி ராமசாமி இசை வெளியீடு: படம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சந்தானம் இரு இயக்குநர்களின் டைரக்ஷனில் தான் எந்த கேள்வியும் கேட்காமல் நடிப்பேன் என்றும் ஒன்று பிரேம் ஆனந்த் மற்றொருவர் கார்த்திக் யோகி என்று குறிப்பிட்ட சந்தானம், இவர்கள் படங்களில் ஹ்யூமர் சிறப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு தனக்கு மற்றொரு வெற்றி அவசியமாக உள்ளதாகவும் அதை வடக்குப்பட்டி ராமசாமி கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கூல் சுரேஷ் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய கூல் சுரேஷ், உங்களுக்குத்தான் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி, ஆனால் எனக்கு அவர் குலதெய்வம் சாமி என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சந்தானத்தின் முந்தைய படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்து தான் கேட்டதாகவும் அவர் உடனடியாக கார்த்திக் யோகியிடம் போன் செய்து பேச சொன்னதாகவும் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் கூல் சுரேஷ் பேசினார். இந்தப் படம் குறித்து கார்த்திக் யோகி தன்னிடம், இந்தப் படத்தை தொடர்ந்து தியேட்டர் வாசலில் இனி தான் கத்த வேண்டாம் என்றும் தியேட்டர் உள்ளே ரசிகர்கள் தன்னை பார்த்து கத்துவார்கள் என்று கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

சந்தானத்தை ஏமாற்றிய கூல் சுரேஷ்: தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் வேறு மாதிரி மாறிவிட்டதாக கூல் சுரேஷ் தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டார். ஆனால் அவர் எந்தவகையிலும் மாறவில்லை என்று காமெடியாக கூறிய சந்தானம், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தனக்கு கால் செய்த கூல் சுரேஷ், சால்வை, மாலை போட வேண்டும் என்று கூறியதாகவும் ஆனால் தன்னை நேரில் சந்தித்தபோது, என் கையில் அவற்றை கொடுத்து அவருக்கு போட வைத்து போட்டோ எடுத்ததையும் குறிப்பிட்டார். தன்னிடமிருந்து நேரடியாக டிஆர் ராஜேந்தர் வீட்டுக்கு போய் அவரையும் இதேபோல கூல் சுரேஷ் ஏமாற்றியதாகவும் சந்தானம் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X