இன்னும் அது மட்டும்தான் பாக்கி... சந்தானத்தின் காமெடி, காதல், ஃபேன்டசி ஷூட்டிங் இன்றோடு ஓவர்

By

சென்னை: ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இன்றோடு முடிவடைகிறது

வினய், சந்தானம் நடித்த ஜெயம் கொண்டான், பரத், தமன்னா நடித்த கண்டேன் காதலை, ஆர்யா, சந்தானம் நடித்த சேட்டை, விமல், சூரி நடித்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, அதர்வாவின் பூமரங்க் உட்பட சில படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.

இவர் அடுத்து இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள்.

தாரா அலிஷா பெர்ரி

தாரா அலிஷா பெர்ரி

ஒருவர், அவருடன் ஏ1 படத்தில் நடித்த, தாரா அலிஷா பெர்ரி. மற்றொருவர் ஸ்வாதி முப்பலாரி. இவர் மிஸ்.கர்நாடகாவாக தேர்வானவர். முக்கியக் கேரக்டரில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி நடிக்கிறார்.

சந்தோஷ் தயாநிதி

சந்தோஷ் தயாநிதி

மற்றும் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், சிவசங்கர் மாஸ்டர் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். 96 சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரமாண்ட செட்

பிரமாண்ட செட்

காதல், காமெடி, ஆக்‌ஷன், ஃபேன்டசி படமான இதில் 30 நிமிட காட்சிகள் 80-களில் நடைபெறுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சியை ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கியுள்ளனர்.

ஒரு பாடல் காட்சி

ஒரு பாடல் காட்சி

செப்டம்பரில் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, இன்று மாலையோடு முடிவடைகிறது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது என்றும் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட முயன்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X