மகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. சரத்குமாருக்கு கொரோனாவா.. வீடியோ மூலம் விளக்கம்!
ஐதராபாத் : நடிகர் சரத்குமார் சிறப்பான பல படங்களில் நடித்து சூப்பர் ஹீரோவாக இருந்தவர்.
தற்போது தன்னுடைய வயதுக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
விஜய்யின் வாரிசு படத்தில் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சரத்குமார்
தென்னிந்திய மொழிகளில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சரத்குமார். இவர் சுப்ரீம்ஸ்டார் என்று ரசிகர்களால் விருப்பமாக அழைக்கப்படுபவர். மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்றுள்ள இவர் பல படங்களில் வில்லனாகவும் தொடர்ந்து ஹீரோவாகவும் நடித்து புகழ் பெற்றவர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்
இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து தற்போது கேரக்டர் ரோல்களில் கலக்கி வருகிறார். லாரன்சின் ருத்ரன், விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் நிறங்கள் ஆகிய படங்களில் இவர் முக்கியமான ரோல்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் சரத்குமார். இந்தப் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் டீசர் வெளியீடு நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்குமார் ரசிகர்களை கவரும் வகையில் பேசினார்.

சரத்குமாரின் 150வது படம்
தொடர்ந்து சரத்குமாரின் 150வது படமான தி ஸ்மைல் மேன் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரியில் துவங்கி தொடர்ந்து வருகிறது. விஜய்யின் வாரிசு படத்திலும் முக்கியமான கேரக்டரில் இவர் நடித்து வருகிறார். தற்போது படத்தின் சூட்டிங்கிற்காக சரத்குமார் ஐதராபாத்தில் உள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த 14ம் தேதி இவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் கலந்து கொண்டார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சரத்குமாருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது.

வொர்க்-அவுட் வீடியோ
இந்நிலையில் இன்றைய தினம் ஐதராபாத்தில் ஒரு ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அனைவரும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்து உடல்நலத்தை பாதுகாக்கவும் அவர் அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார். மகிழ்ச்சியை பகிரவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாரிசு சூட்டிங்கில் சரத்குமார்
மேலும் இன்றைய தினம் வாரிசு சூட்டிங்கில் கலந்து கொண்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தனது உடல்நலத்தில் மிகுந்த அக்கறையுடன் வொர்க் அவுட் செய்து வருபவர் சரத்குமார்.


Click it and Unblock the Notifications











