மறைந்த அம்மாவின் கண்ணாடி, வளையல், செயின்.. சரத்குமார் செய்த மாஸான செயல்.. ஹோம் டூர் வெளியீடு!
சென்னை: நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் வில்லனாக என்ட்ரி கொடுத்து தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்தவர். சூரியவம்சம் உள்ளிட்ட பல படங்களில் இவரது இயல்பான நடிப்பு அந்த படத்தை வெற்றிப்படமாக்கியது. முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சரத்குமார்.
தற்போது போர் தொழில் உள்ளிட்ட பல படங்களில் இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அடுத்ததாக தயாரிப்பையும் தான் மேற்கொள்ள உள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். பிரபல சேனலுக்காக அவர் தன்னுடைய ஹோம் டூரை வெளியிட்டுள்ளார். இதில் தன்னுடைய அம்மா உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசியுள்ளார்.

நடிகர் சரத்குமார்: நடிகர் சரத்குமார் கோலிவுட்டில் வில்லனாக தன்னுடைய என்ட்ரியைத் துவங்கி தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவரது நடிப்பில் வெளியான சூரிய வம்சம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட் படங்களாக அமைந்துள்ளன. தற்போது போர்த் தொழில் உள்ளிட்ட படங்களில் இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார் சரத்குமார். தொடர்ந்து இவரது இரண்டாவது இன்னிங்சிலும் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அடுத்ததாக தயாரிப்பிலும் இறங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் அவதாரம்: நடிகர் யோகிபாபுவை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டு வருவதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். சரத்குமாரின் ஹோம் டூர் தற்போது பிரபல சேனலில் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவரது வீடு மிகச் சிறப்பான வடிவமைப்புடன் அமைந்துள்ளதை பார்க்க முடிகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தானே பார்த்து பார்த்து செதுக்கிய தன்னுடைய வீடு என்று சரத்குமார் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீட்டில் தனக்கென தனியாக ஜிம், லைப்ரரி உள்ளிட்டவையும் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீட்டில் தன்னுடைய பேவரிட் நடிகரான மறைந்த எம்ஜிஆரின் தனித்துவமான புகைப்படத்தை வைத்துள்ளார் சரத்குமார்.

எம்ஜிஆரை போல போஸ்: இந்த புகைப்படத்தில் எம்ஜிஆர் கேமராவை பார்ப்பதாக காணப்படுகிறது. இதேபோல ஐயா படத்தில் சரத்குமார் கேமராவை பார்ப்பதாகவும் புகைப்படத்தை சரத்குமார் தன்னுடைய வீட்டில் வைத்துள்ளார். இதேபோல சர்வதேச அளவில் பிரபலங்களின் புகைப்பட கொலாஜையும் அவர் தன்னுடைய ஹாலில் வைத்துள்ளார். அதில் சரத்குமாரின் புகைப்படமும் உள்ள நிலையில், அதில் அவரது மகன் ராகுல், சிறந்த நடிகர் என்று எழுதிவிட்டதாக தெரிவித்துள்ளார் சரத்குமார். தொடர்ந்து இந்த வீடியோவில் தன்னுடைய வீட்டின் நாய் குறித்தும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அம்மாவின் நினைவாக: தன்னுடைய அம்மாவின் அறையையும் அவர் உருக்கத்துடன் காட்டியுள்ளார். அவரது ஞாபகார்த்தமாக அவர் இறந்த பின்பு அவரது வளையல், கண்ணாடி, செயின் போன்றவற்றை பிரேம் போட்டு வைத்து அழகாக மாற்றியுள்ளார் சரத்குமார். தான் எப்போதாவது மனம் சஞ்சலப்பட்டால் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொள்வேன் என்றும் அங்கு தன்னுடைய அம்மா இப்போதும் வாழ்வதாக தான் கருதுவதாகவும் சரத்குமார் கூறியுள்ளார். தன்னுடைய அம்மாவிடம் இருந்து அவரது சமையல் கலை தனக்கும் ஒட்டிக் கொண்டதாகவும் இந்த ஹோம் டூர் வீடியோவில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











