twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிரட்டும் கொரோனா: விசு மறைவுக்கு வீட்டில் இருந்தே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரபல நடிகர் ஒருவர் மறைந்த இயக்குநர் விசுவுக்கு வீட்டில் இருந்தப்படியே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளளார்.

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மரண பீதியை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுக்க 15 ஆயிர்த்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ள இந்த வைரஸை ஒரு பெரும் நோய் தொற்றாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம்.

    Actor Sarathkumar pays tribute to director Visu in his nouse itself

    பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் வெளி நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் இந்த 144 தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.

    இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான விசு நேற்று மாலை சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் செலுத்தினர். கொரோனா வைரஸ் பீதியால் திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் நடிகர் சரத்குமார் வீட்டிலேயே கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த இயக்குநர் விசுவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நம்மால் மற்றவர்களுக்கும், மற்றவர்களால் நமக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் அவரது இறுதி அஞ்சலியில் தன்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Actor Sarathkumar pays tribute to director Visu in his nouse itself. Visu passed away yesterday due to illness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X