Actor Sarathkumar: இந்த வயதிலும் சரத்குமார் பிட்னஸ் ரகசியம்.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா!
சென்னை: நடிகர் சரத்குமார் வில்லனாக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கினார். மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்துடன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் வில்லன் கேரக்டர்களை தொடர்ந்து ஹீரோவாகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள சரத்குமாருக்கு சூர்யவம்சம் உள்ளிட்ட பல படங்கள் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தன. தற்போது தன்னுடைய நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்களில் கூட்டணி அமைத்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான வாரிசு, போர் தொழில் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்று தந்தன.
கேரக்டர் மற்றும் வில்லன் கேரக்டர்களில் தொடர்ந்து பிசியான நடிகராக நடித்து வருகிறார். 70 வயதை நெருங்கியுள்ள சரத்குமார் தற்போதும் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக ஈடுபடுத்தி வருகிறார். தன்னுடைய கட்சி தொடர்பான பணிகளிலும் குடும்பத்தினருடனும் அதிக நேரங்களை செலவழித்து வருகிறார். நடிகை ராதிகாவை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சரத்குமாருக்கு ஒரு மகன் உள்ளார். அடுத்தடுத்து சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் நேரம் செலவழிக்கும் குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் சரத்குமார்: நடிகர் சரத்குமார் 70 வயதை நெருங்கியுள்ளார். வில்லனாக சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கிய சரத்குமார் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் ஏராளமான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்துடன் சினிமாவில் நடிக்கத் துவங்கிய சரத்குமார் தொடர்ந்து தன்னுடைய பிட்னசை மிகச்சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் தன்னுடைய கட்சி மீட்டிங்கில் பங்கேற்று பேசிய சரத்குமார், தான் தற்போதும் 25 வயது இளைஞனாகவே தன்னை உணர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
150 வயது வரை வாழ்வேன்: தான் 150 வயது வரை வாழ்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார் சரத்குமார். இதற்கான வித்தைகளை தான் கற்று வைத்துள்ளதாகவும் இவற்றை 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அரியணையில் ஏறும்போது சொல்வேன் என்றும் அவர் கூறியிருந்தார். இது சாத்தியமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர். தன்னுடைய பிட்னசை மெயின்டெயின் செய்ய சரத்குமார் அப்படி என்னதான் சாப்பிடுகிறார் எப்படிப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுகிறார் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். இதனிடையே பேட்டியொன்றில் அவர் தினசரி கடைப்பிடிக்கும் உணவு உள்ளிட்ட பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சரத்குமார் பிட்னஸ் ரகசியம்: காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்துவிட்டு, பிளாக் காபியில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுவாராம் சரத்குமார். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவிட்டு 9 மணியளவில் 4 முட்டைகளின் வெள்ளைக்கருவை வேகவைத்து சாப்பிடுவாராம். தொடர்ந்து 11 மணியளவில் ஏபிசி ஜூஸ் குடிக்கும் சரத்குமார், மதிய உணவாக இரண்டு பீஸ் சிக்கனை வேகவைத்து அத்துடன் அதிகமான காய்கறிகளையும் வேக வைத்து மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடுவாராம். இத்துடன் சாதம், சப்பாத்தி போன்ற எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார் சரத்குமார். தொடர்ந்து 4 மணியளவில் அவலை வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிடுவாராம்.
வெறித்தனமான வொர்க்அவுட்: தொடர்ந்து இரவு 7 மணியளவில் சிக்கன் அல்லது மட்டன் சூப்பை குடித்துவிட்டு அத்துடன் தன்னுடைய உணவை முடித்துக் கொள்வாராம் சரத்குமார். தினந்தோறும் 3 லிட்டர் தண்ணீரையும் குடித்து விடுவாராம். இதுவே அவரது ஆரோக்கியமான உடலுக்கு காரணமாக அவர் குறிப்பிடுகிறார். இந்த வயதிலும் வெற்த்தனமாக வொர்க் அவுட்டை செய்யும் வழக்கத்தை மட்டும் எந்த காரணத்திற்காகவும் அவர் நிறுத்துவதில்லை. இதுவும் அவரது பிட்னஸ் ரகசியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











