நம்ம சரத்குமாரா இது.. ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுல கலக்குறாரே.. வைரலாகும் மரண மாஸ் லுக்!

சென்னை : சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் வெறித்தனமான லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வரும் சரத்குமார் அதில் " சுந்தர சோழா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

உடற்பயிற்சியில் அதிகம் ஆர்வம் காட்டி வரும் சரத்குமார் அடுத்த படத்திற்காக ஹாலிவுட் ஹீரோவைப் போல உடம்பை முரட்டுத் தனமாக ஏற்றிக் கொண்டு நீண்ட தாடியுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்று இப்பொழுது தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மலையாள ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈடு இணையற்ற

ஈடு இணையற்ற

ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து வில்லன் நடிகராக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல மொழிகளில் ரீமேக்

பல மொழிகளில் ரீமேக்

பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ள சரத்குமார் 1990 களில் கொடிகட்டி பறந்த நிலையில் இவர் நடித்த பல திரைப்படங்கள் இந்தி தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

மீண்டும் மணிரத்னத்துடன்

மீண்டும் மணிரத்னத்துடன்

சமீபத்தில் மணிரத்னம் தயாரித்து வெளியான வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் தனது முரட்டுத்தனமான நடிப்பை குழந்தைத்தனமான கதாபாத்திரத்தில் காட்டி இருந்த சரத்குமாருக்கு பல்வேறு பாராட்டுக்களும் வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சுந்தர சோழா

சுந்தர சோழா

மிகப் பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி வர இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் அதில் சரத்குமார்
" சுந்தர சோழா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக உடம்பை தாறுமாறாக தயார்ப் படுத்தி வரும் நடிகர் சரத்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இப்பொழுது இணையத்தை பந்தாடி வருகிறது.

Recommended Video

THALAPATHY நாட்டாமை படத்துல நடிக்க வேண்டியது | REWIND RAJA | FILMIBEAT TAMIL
மலையாள நடிகர்கள்

மலையாள நடிகர்கள்

கட்டுமஸ்தான உடம்பில் ஒரு பக்கம் தேசியக் கொடி பச்சை குத்தியும், மறுபுறம் டம்புல்ஸை தாங்கியவாறும் நீண்ட தாடியுடன் வெறித்தனமாக போஸ் கொடுத்திருக்கும் சரத்குமாரின் இந்த மரண மாஸ் ஜிம் புகைப்படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து பெரும் வைரலாகி வரும் நிலையில் மலையாள நடிகர்களும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருவதையொட்டி மலையாள ரசிகர்களிடையேயும் இந்த புகைப்படம் பிரபலமாகி இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X