சசிகுமாரின் 21 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியானது!
சென்னை: தொடர்ந்து கமர்ஷியல் வெற்றி படங்களை கொடுத்து வரும் சசிகுமாருக்கு கடைசியாக எம்ஜிஆர் மகன் மற்றும் ராஜவம்சம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின.
இந்த நிலையில் அடுத்ததாக கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து
இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது நடிகராக கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் சசிகுமாரின் திரைப்படங்களுக்கு என்றே இங்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பாக இவரது படங்களில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதால் இன்றளவும் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி
பார்ப்பதற்குப் பக்கத்து வீட்டு பையன் போலவே அனைவருக்கும் பரிச்சயமானவராக உள்ள சசிகுமார் இப்போது ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து பணியாற்றி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவான எம்ஜிஆர் மகன் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ராஜவம்சம் திரைப்படமும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

அடுத்தடுத்த படங்கள்
தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் சசிகுமாருக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி ரிலீசாக காத்துக் கொண்டுள்ளன அந்த வகையில் பகைவனுக்கு அருள்வாய்,கொம்புவச்ச சிங்கம்டா, முந்தானை முடிச்சு 2 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

சத்யசிவாவுடன் கூட்டணி அமைத்து
இந்த நிலையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவாவுடன் கூட்டணி அமைத்து புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜவம்சம் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது . இதில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். மேலும் விக்ராந்த்,துளசி,மதுசூதனன், ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்
Recommended Video

டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்
த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 23-ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











