நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தின் மாஸான டைட்டில் அறிவிப்பு!

சென்னை : நடிகர் சசிகுமார் முதல்முறையாகப் பொன்ராம் உடன் இணைந்த எம்ஜிஆர் மகன் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் என கைவசம் பல படங்களில் நடித்து வரும் சசிகுமார் இப்பொழுது அடுத்ததாக மந்திர மூர்த்தி என்பவரின் இயக்கத்தில்புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த படத்திற்கு தற்போது அயோத்தி என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிப்பதில் அதிக கவனம்

நடிப்பதில் அதிக கவனம்

மிகச் சிறந்த இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு தமிழ் சினிமாவில் நுழைந்த சசிகுமார் இப்பொழுது கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறார். இயக்கிய சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற போதும் அடுத்தடுத்த படங்களை இயக்க சசிகுமார் தயாராகி வருகிறார். இருப்பினும் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படம் வெளியானது

நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றி வந்த இயக்குனர் பொன்ராம் முதல் முறையாக சசிகுமாருடன் இணைந்த எம்ஜிஆர் திரைப்படம் பல்வேறு காரணங்களால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியிட முடியாமல் போனது. இயக்குனர் பொன்ராமின் வழக்கமான பார்முலாவில் உருவான எம்ஜிஆர் மகன் தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

சர்ச்சைக்குரிய டைட்டில் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய டைட்டில் அறிவிப்பு

இந்த நிலையில சசிகுமாருக்கு ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் பகைவனுக்கு அருள்வாய் என அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சன் கதாநாயகனாகவும் சசிகுமார் உருவெடுத்து வர இப்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் மேலும் அப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்க உள்ள இந்த படத்திற்கு "அயோத்தி" என்ற சர்ச்சைக்குரிய டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

குடும்ப படம் அதான் நடிச்சேன் | Rajavamsam | Actor Sasikumar Speech | Filmibeat Tamil
அயோத்தி

அயோத்தி

மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ்,போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது . ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று என்னும் விஷயத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான டைட்டிலுடன் சசிகுமார் நடித்து வரும் "அயோத்தி" படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X