சன்னி லியோன் இன்னைக்கு லீவு.. தர்ஷா குப்தாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கும்மாளம் அடித்த சதீஷ்!
சென்னை: குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தாவுடன் செம கலக்கலான ரீல் ஒன்றை எடுத்த நடிகர் சதீஷ் அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.
சன்னி லியோன் நடித்து வரும் தமிழ் படமான ஓ மை கோஸ்ட் படத்தில் நடிகர் சதீஷ் மற்றும் நடிகை தர்ஷா குப்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகையாக வலம் வந்த தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சன்னி லியோன் படம்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹீரோயினாக நடிக்கும் தமிழ் படமான 'ஓ மை கோஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, ஜிபி முத்து உள்ளிட்ட ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

கலக்கும் தர்ஷா
அக்டோபர் 2ம் தேதி வெளியான மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமான குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா அடுத்ததாக சன்னி லியோன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சில படங்கள் தர்ஷா குப்தாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன.

நாய் சேகர் சதீஷ்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் சதீஷ் அடுத்ததாக சன்னி லியோன் நடிக்கும் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் டைட்டில் சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (ஒரிஜினல்) எனும் டைட்டிலில் நடித்து வருகிறார். எந்த நாய் சேகர் ஹிட்டாகும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
Recommended Video

பவித்ராவை அடுத்து தர்ஷா
குக் வித் கோமாளி பிரபலமான பவித்ரா லக்ஷ்மி உடன் நாய் சேகர் படத்தில் நடித்துள்ள நடிகர் சதீஷ் அடுத்ததாக மற்றொரு குக் வித் கோமாளி பிரபலமான தர்ஷா குப்தாவுடன் ஓ மை கோஸ்ட் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இருவரும் இணைந்து போட்டுள்ள ரீல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்னி லியோன் லீவு
நடிகை தர்ஷா குப்தாவுடன் இணைந்து காமெடியான ஒரு ரீலை போட்டுள்ள நடிகர் சதீஷ் அதற்கு கேப்ஷனாக சன்னி லியோன் இன்னைக்கு லீவு அதனால் தான் இப்படி என குறிப்பிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார். கலக்குங்க சதீஷ் என்றும் வாழ்றான்யா மனுஷன் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

சீக்கிரமே போடுங்க
தர்ஷா குப்தாவுடன் நடிகர் சதிஷ் போட்ட ரீல் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனை கேட்டதா சொல்லுங்க என்றும் சீக்கிரமே அவங்க கூட ஒரு ரீல் போடுங்க என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











