நாய் சேகர் போஸ்டரை பார்த்து சதீஷை மோசமாக கலாய்த்த நெட்டிசன்.. அவர் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் நாய்சேகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
அந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன் ஒருவர் நடிகர் சதீஷை மிகவும் மோசமாக கலாய்த்துள்ளார்.
அந்த நெட்டிசனின் ட்வீட்டுக்கு நடிகர் சதீஷ் போட்ட கமெண்ட் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வடிவேலு டைட்டில்
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் நாய் சேகர் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்திருப்பார். அந்த டைட்டிலில் புதிய படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், தயாரிப்பாளர் சங்க தடை காரணமாக நடிகர் வடிவேலு புதிய படங்களில் கமீட் ஆகாமல் இருந்த நிலையில், அந்த டைட்டிலை ஏஜிஎஸ் பதிவு செய்து விட்டது.

சதீஷ் ஹீரோ
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்க நாய் சேகர் டைட்டிலில் புதிய படத்தை இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி உள்ளது. இந்த டைட்டிலை நடிகர் வடிவேலு ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கேட்டு முறையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

பிரச்சனை தீர்ந்ததா
ஆனால், வடிவேலுக்கு தற்போது நாய் சேகர் டைட்டில் இல்லை என்பது உறுதியாகி உள்ள நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் வடிவேலு இடையே பிரச்சனை பெரிதாகி விட்டதா? அல்லது சுமூக பேச்சுவார்த்தைகளுடன் பிரச்சனை முடிவுக்கு வந்ததா என்கிற கேள்விகளை வடிவேலு ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
மேலும், வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்க உள்ள புதிய படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற டைட்டில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் லைகா தயாரிப்பில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் வாழ்த்து
நாய் சேகர் டைட்டிலில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பனான சதீஷுக்கு சூப்பரான வாழ்த்து ட்வீட் ஒன்றையும் போட்டு அசத்தி உள்ளார். " வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி.. சதீஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள், படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்" என வாழ்த்தி உள்ளார்.

ரசிகரின் மோசமான கமெண்ட்
"ரெண்டு நாயும் வேற லெவல் ப்ரோ" என நெட்டிசன் ஒருவர் சதீஷின் நாய் சேகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து மிகவும் மோசமான முறையில் கமெண்ட் செய்துள்ளார். ஆனால், அந்த கமெண்ட்டை பார்த்து கோபப்படாமல் நடிகர் சதீஷ் போட்ட ட்வீட் தான் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நச் பதிலடி
"ரொம்ப நன்றி ப்ரோ.. இந்த படத்தின் ஸ்டோரி லைன்னுக்கு உங்களுடைய கமெண்ட் தான் வெற்றியை கொடுத்திருக்கிறது" என ரொம்ப கூலாக இந்த விஷயத்தை கையாண்டு பாராட்டுக்களை குவித்து வருகிறார் நடிகர் சதீஷ். இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லக்ஷ்மி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











