நடிகைகளுடன் ஜிம்மில் சேட்டை செய்த ஆர்யா.. சாயிஷாவிடம் போட்டுக்கொடுத்த சதீஷ்.. என்னங்க நடக்குது!
சென்னை: சேட்டை படத்தில் நடித்த ஆர்யா சமீபத்தில் ஜிம்மில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் செம சேட்டையாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்ட நிலையில், காமெடி நடிகர் சதீஷ் அதை ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு டேக் செய்து போட்டுக் கொடுத்துள்ளார்.
நடிகர் ஆர்யா ஜிம் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பா. ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த சார்பட்டா பரம்பரை படத்தை எல்லாம் அவரது உடம்புக்காகவே பலரும் பார்த்து ரசித்தனர். மேலும், சைக்கிளிங் செல்வதும் ஆர்யாவின் ஃபேவரைட்டான ஒன்றாக உள்ளது.

45 வயதை கடந்துள்ள ஆர்யாவுக்கு கடைசியாக 2021ம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை, எனிமி உள்ளிட்ட படங்கள் தான் நல்ல வெற்றிப் படங்களாக அமைந்தன.
4 ஆண்டுகளாக சொதப்பல்: அதன் பிறகு அவர் நடித்த கேப்டன், காபி வித் காதல், காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், வசந்தமுல்லை உள்ளிட்ட படங்கள் ஃப்ளாப் ஆகின. மேலும், சில படங்களில் கேமியோவாக நடித்தாலும் அதுவும் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை. மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் உள்ளிட்ட படங்கள் வெளியானால் தான் ஆர்யாவுக்கு மீண்டும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படமும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. சந்தானத்தை வைத்து அவர் தயாரித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் வெற்றிப் பெறவில்லை.
ஜிம்மில் நடிகைகளுடன் சேட்டை: திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் அவர் நடித்து வெளியான டெடி திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல படமாக அமைந்தது. திருமணத்துக்குப் பிறகு சிம்புவின் பத்து தல படத்தில் மட்டுமே ஐட்டம் பாடலுக்கு சாயிஷா நடனமாடினார். அவரும் சினிமாவை விட்டு சுத்தமாக விலகி விட்டார். இந்நிலையில், ஜிம்மில் தனது அடுத்த படத்தில் இணைந்து நடித்து வரும் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் செம ரொமாண்டிக்காக ஒர்க்கவுட் செய்வது போன்ற போட்டோக்களை ஆர்யா வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், அதை பார்த்து வயிறு எரிந்த சதீஷ் தற்போது போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
சாயிஷாவிடம் போட்டுக்கொடுத்த சதீஷ்: கடந்த வாரம் சதீஷ் நடித்த முஸ்தபா முஸ்தபா படம் வெளியானது. அவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வரும் படங்கள் எல்லாமே பெரிதாக கைகொடுப்பதில்லை. இந்நிலையில், ஜிம்மில் நடிகைகளுடன் ஆர்யாவை பார்த்து பொறாமைப்பட்ட சதீஷ், "நானெல்லாம் ஜிம்முக்குப் போன வந்த வேலையை மட்டும் தான் பார்க்குறது ஆர்யா டார்லிங் என கோபமான எமோஜியை போட்டு ஜஸ்ட் ஃபார் யுவர் ஜெனரல் நாலெட்ஜ் என ஆர்யாவின் மனைவி சாயிஷாவையும் டேக் செய்துள்ளார். சமீப காலமாக கோலிவுட்டில் பல குடும்பங்களில் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சதீஷ் இப்படி பத்த வச்சிட்டாரே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











