Actor Sathish: கான்ஜூரிங் கண்ணப்பன் 25வது நாள் கொண்டாட்டம்.. நடிகர் சதீஷ் வேற லெவல் பிளான்!

சென்னை: நடிகர் சதீஷ் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக நடித்து கவனம் பெற்றவர். தற்போது இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சதீஷ் லீட் கேரக்டரில் நடித்த கான்ஜூரிங் கண்ணப்பன் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தது. அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இந்தப் படத்தை இயக்கியிருந்த நிலையில், படத்திற்கு யுவன் சங்கர் ராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் ரெஜினா, நாசர், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. படம் தற்போது திரையரங்குகளில் 25 நாட்களை பூர்த்தி செய்துள்ளதாக நடிகர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஹாரர் திரில்லராக உருவான இந்தப் படத்தில் காமெடியையும் மிக்சிங் செய்து கொடுத்துள்ளார் இயக்குநர். வித்தியாசமான கதைக்களத்தில் இநத்ப் படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாயகனாகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் சதீஷ்.

Actor Sathish wants to celebrate 25th day completion of Conjuring Kannappan movie with fans

நடிகர் சதீஷ்: நடிகர் சதீஷ் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்தவர். தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வரும் சதீஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன், ஹாரர் திரில்லராக காமெடியும் இணைந்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்தப் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் 25 நாட்களை கடந்துள்ள நிலையில் தொடர்ந்து அதிகமான திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சிக்கலின் சதீஷ்: தனக்கு கிடைக்கும் ஒரு பொருளில் றெக்கையை பறித்துவிடுகிறார் சதீஷ். இதையடுத்து அவருக்கு கனவில் ஏற்படும் அனுபவம், அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் அவருக்கு வைத்தியம் பார்க்கும் ரெடின் கிங்ஸ்லி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆனந்தராஜ் உள்ளிட்டவர்களும் அந்த கனவில் பேய்களால் துரத்தப்படுகின்றனர். அதிலிருந்து அவர்கள் தப்பிக்கும் சூழலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைகக்ளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சதீஷின் நடிப்பு சில இடங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் மொத்தத்தில் சிறப்பான விமர்சனங்களையே பெற்றுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை: படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவும் சிறப்பான இசையை கொடுத்துள்ளார். படம் துவக்கத்தில் அதிகமான சுவாரஸ்யத்தை கொண்டிருந்தாலும் போக போக ரசிகர்களை சோதிப்பதும் காணப்படுகிறது. இந்தப் படத்தில் பேய் படங்களுக்கேயுரிய காட்சிகளையும் அதிகமாக சேர்த்துள்ளார் இயக்குநர். இந்நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் தற்போது 25 நாட்களை கடந்துள்ளது. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சதீஷ் மகிழ்ச்சி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 50 திரையரங்குகளில் இந்தப் படம் வெற்றிகரமான ஓடி வருவதாக அவர் கூறியுள்ளார்.

நடிகர் சதீஷ் வீடியோ மெசேஜ்: இந்த காலகட்டத்தில் 50 திரையரங்குகளில் ஒருபடம் 25 நாட்களை எட்டியுள்ளது எவ்வளவு பெரிய சாதனை என்பதையும் அவர் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாளைய தினம் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் பிற்பகல் ரசிகர்களுடன் இணைந்து தான் படத்தை பார்க்க வருவதாக அவர் தெரிவித்துள்ளார். திரையரங்கில் ரசிகர்களை சந்திக்க தான் மிகவும் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X