மனைவி சுடிதாரை எடுத்து மாட்டிக்கிட்ட சதீஷ்.. யாருக்காங்கறது தான் இதுல ஹைலைட்டே.. ரொம்ப பாவம்!
சென்னை: கிரேஸி மோகனின் நாடக ட்ரூப்பில் கதையாசிரியர் ஆகவும் வசனகர்த்தாவாகவும் பல ஆண்டுகள் பணியாற்றி வந்த சதீஷ் ஜித்தன் ரமேஷ் நடித்த ஜெர்ரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், 2010ம் ஆண்டு சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தந்தது.
மதராசப்பட்டினம், வாகை சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த சதீஷ் மெரினா படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்தார். இருவரது காமெடி டிராக்கும் ஒர்க்கவுட் ஆக, எதிர்நீச்சல், மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் என பல படங்களிலும் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கினர்.

காமெடி நடிகர்களாக அறிமுகமான சந்தானம், சூரி, யோகி பாபு எல்லாம் எப்படி ஹீரோக்களாக மாறினார்களோ அந்த வரிசையில் சதீஷும் சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார். சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் சதீஷ் வீட்டில் தனது மகளுக்காக நைட்டி உடையை அணிந்துக் கொண்டு நிற்க வேண்டிய சூழலுக்கு வந்துவிட்டதாக தற்போது வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.
ஹீரோவாக கலக்கும் சதீஷ்: சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக அசத்தி வந்த சதீஷ், 2022ம் ஆண்டு நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். ஓ மை கோஸ்ட், கான்ஜூரிங் கண்ணப்பன், வித்தைக்காரன், சட்டம் என் கையில், முஸ்தபா முஸ்தபா உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால், இன்னமும் ஹீரோவாக அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை.
சுடிதார் அணிந்த சதீஷ்: அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஜாலியாக சதீஷ் போடும் விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவரும். சமீபத்தில், ஆர்யா நடிகைகளுடன் ஜிம் ஒர்க்கவுட் செய்ததை பார்த்து, சாயிஷாவிடம் கோர்த்து விட்ட ட்வீட் வைரலானது. இந்நிலையில், தனது மகளை தூங்க வைப்பதற்க நைட்டி அணிந்துக் கொண்டு படாதபாடு படுகிறேன் என்றும் மகளை தூங்க வைக்க தமிழ்ப்படம் 2 படத்தில் போட்ட அளவுக்கு கெட்டப் போட வேண்டியிருக்கு என கேப்ஷன் கொடுத்துள்ளார். நடிகர் சதீஷின் மகள் செம க்யூட்டாக இருக்காரே என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











