ரஜினியுடன் நடிக்கும் கனவு நனவானது…. ட்விட்டரில் நெகிழ்ந்து நன்றி கூறிய காமெடி நடிகர் !
சென்னை : ரஜினியுடன் நடிக்கும் கனவை நனவாக்கிய இயக்குனருக்கு நடிகர் சதிஷ் நன்றி கூறியுள்ளார்.
காமெடி நடிகரான சதிஷ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதய நோய்.. போராடும் 8 மாத பிஞ்சு குழந்தை.. அறுவைசிகிச்சைக்கு உதவுங்களேன்

அண்ணாத்த
அண்ணாத்த ரஜினிகாந்தின் 168வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மீனா, பிரகாஷ்ராஜ், சூரி,சதீஷ் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ரமோஷி ஃபிலிம் சிட்டியில் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து, கொரோனாவால் இந்தியா முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து,கொரோனா முதல் அலை ஓய்ந்து, ஓரளவு நிலைமை சரியானதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

கொரோனாவால் தாமதம்
அப்போது ஹைதராபாத் படப்பிடிப்புத்தளத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பை தொடங்க முடியாதபடி கொரோனா இரண்டாவது தீவிரமானதால் படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை.

படப்பிடிப்பு பணிகள் முடிந்தன
அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். இந்த முறை ரஜினிகாந்த் சம்பந்தமான அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அமெரிக்கா சென்றார்
அமெரிக்காவில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட ரஜினிகாந்த் ஆண்டும் தோறும் மருத்துவ பரிசோதனைக்கா அமெரிக்கா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து,கடந்த ஜூன் 19ந் தேதி அமெரிக்கா சென்ற ரஜினி அங்கு 3 வார காலம் தங்கி இருந்தார். மாயோ கிளினிக் முன்பு ரஜினிகாந்த தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார்.

மீனா டப்பிங் பணி
ரஜினிகாந்த்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா. முத்து, வீரா, எஜமான் போன்ற திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறரா என்ற தகவல் வெளியாக வில்லை. அண்மையில் நடிகை மீனா டப்பிங் பணியை தொடங்கி உள்ளார்.

கனவு நனவானது
இந்நிலையில் , அண்ணாத்த பட டப்பிங் பணியை முடித்த காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில்,அண்ணாத்த டப்பிங் தலைவர் rajinikath உடன் நடிக்கும் கனவை நனவாக்கியdirectorsivasir Sunpictures... கடவுள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

தீபாவளிக்கு ரிலீஸ்
அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











