பெரிய நடிகனாகணும்னு நினைக்கல.. தமிழ்நாட்டு மக்களின் அன்புக்காக அரசியலுக்கு வராரு விஜய்.. ஷாம் பளிச்!

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆவேன் என்கிற முடிவுடன் அரசியலில் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், அஸ்திரம் படத்தின் புரோமோஷனுக்காக பேட்டி அளித்த நடிகர் ஷாம் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் அவரது குறிக்கோள் குறித்தும் பேசி இருப்பது தளபதி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

12 பி படத்தில் ஷாம் அறிமுகமாவதற்கு முன்பாகவே நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடித்த குஷி படத்தில் நண்பனாக நடித்திருப்பார். அதன் பின்னர் ஜோதிகா மற்றும் சிம்ரன் என இரண்டு ஹீரோயின்களுடன் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் இந்த வாரம் அஸ்திரம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

Actor Shaam opens up about why Vijay turned to be a politician

அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள அஸ்திரன் திரைப்படம் மார்ச் 21ம் தேதி அன்று திரைக்கு வந்துள்ளது. விஜய் நடித்த வாரிசு படத்தில் வில்லனாக நடித்த ஷாம் மீண்டும் ஹீரோவாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

வாரிசு படம் சமயத்திலேயே: வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராகவும் படத்தில் நெகட்டிவ் ரோலிலும் நடித்து அசத்தி இருந்தார் நடிகர் ஷாம். 12பி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, இயற்கை, லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் சாக்லேட் பாயாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஷாம். வாரிசு படத்தில் நடிக்கும் போதே நடிகர் விஜய் இன்னும் இரண்டு படங்கள் தான் என்றும் அதன் பின்னர் நடிப்பை விட்டு விட்டு அரசியல் பக்கம் செல்ல போவதாக சொனனர் எனக்கூறியுள்ளார்.

ஜனநாயகன் கடைசி படம்: வாரிசு படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார் நடிகர் விஜய். அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் நடித்து வசூலை குவித்தார். கடைசியாக ஜனநாயகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிகர் விஜய் நடிக்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

மக்களுக்காக அரசியல்: சாதாரண நடிகனாக வேண்டுமென்று சினிமாவுக்கு வந்தேன். இந்த அளவுக்கு பெரிய ஹீரோ ஆவேன் என்றெல்லாம் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. என்னை இந்த அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு வந்து வைத்துள்ள தமிழக மக்களுக்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் அரசியலுக்கு போகப் போகிறேன் என விஜய் அண்ணா கூறினார். அதற்காக மட்டும் தான் அவர், ஜாலியாக சினிமாவில் நடித்துக் கொண்டு கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்கி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு வாழ்ந்து இருக்கலாம். ஆனால், மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்வு தான் அவரை இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

Take a Poll

சும்மா கூப்பிடமாட்டார்: ஷாம் அரசியலுக்கு வந்துடுன்னு அவர் சொன்னா உடனே நான் போய்விடுவேன். ஆனால், அண்ணா அப்படி சொல்ல மாட்டார். ரொம்பவே சீரியசான விஷயம் இதில், இறங்கினால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் ரெடியாக இருப்பவர்களை மட்டுமே அழைப்பார். அதுவும் அவர்கள் விருப்பப்பட்டு சென்றால் மட்டும் தான் என்றும் நடிகர் ஷாம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X