போக்கிரி உப்மா ஃபேமிலி காமெடி.. மாஸ்டர் நடிகர் மனைவியுடன் ரகளை பண்ணும் டிக் டாக் வீடியோ!
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
Recommended Video
ஷூட்டிங் இல்லாததால், நடிகர்கள் வீட்டுக்குள் இருந்து மொபைல் மூலம் எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தங்கள் ரசிகர்களோடு இந்த நேரத்திலும் இணைப்பில் இருக்கின்றனர்.
மாஸ்டர் பட நடிகர் சாந்தனு, தனது மனைவி கிக்கி விஜய்யுடன் இணைந்து எடுத்த டிக் டாக் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

சமூக அக்கறை
இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு, கொரோனா குவாரண்டின் காலத்தில் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார். ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு, அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவுகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்.

வொர்க்கவுட் ஆகல
வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாந்தனு, சக்கரக்கட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஏ.ஆர். ரஹ்மான் சார் மியூசிக் எல்லாம் கிடைத்தும், படம் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒரு வெற்றியையும் பெறவில்லை.

வெயிட்டிங்
சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து அசத்திய சாந்தனு, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படம் தான் தனக்கு முதல் படம் மாதிரி இருக்கு என இசை வெளியீட்டு விழாவில் சொன்ன சாந்தனு, அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
உப்மா காமெடி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சாந்தனு, தனது மனைவியுடன் போக்கிரி படத்தில் வரும் உப்மா ஃபேமிலி காமெடி வசனத்தை டிக் டாக் வீடியோவாக பேசியுள்ளார். ஏற்கனவே எடுத்த பல டிக் டாக் வீடியோக்களை ஒன்றிணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறார்.

மீண்டும் அப்பாவுடன்
மாஸ்டர் படத்தில் நடித்துள்ள சாந்தனுவுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் சினிமாவில் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது. லாக் டவுனுக்கு முன்னதாக தந்தை பாக்கியராஜ் உடன் மீண்டும் சாந்தனு இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டது. அதுல்யா ரவி சாந்தனுவுடன் ஜோடி போட்டு நடிக்கிறார். ஆனால், இந்த கொரோனா வந்து வீட்டுக்குள் மனைவியுடனே நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











