மனைவியின் நடனத்தை படம்பிடித்த சாந்தனு... வைரலான வீடியோ!
சென்னை : நடிகர் சாந்தனு, அவரது மனைவி கீக்கி இருவரும் சிறப்பான தம்பதிகளாக உள்ளனர்.
சாந்தனு நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் தன்னுடைய மனைவியின் நடனத்தை சாந்தனு படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.

நடிகர் சாந்தனு
நடிகர் சாந்தனு சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வரும் 10ம் தேதி முருங்கைக்காய் சிப்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சிறப்பான தம்பதி
சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி சாந்தனு இருவரும் ஆதர்ச தம்பதிகளாக விளங்குகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர். இருவரும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தம்தம் பாடலுக்கு ஆட்டம்
இந்நிலையில் தற்போது கீர்த்தி என்று அழைக்கப்படும் கீகீ சாந்தனு தம்தம் பாடலுக்கு சிறப்பான வகையில் நடனமாடியுள்ளார். எனிமி படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நடனம் அமைத்த பிருந்தா
கீகீ ஆடியுள்ள இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிருந்தா மாஸ்டர். கிகி ஸ்டூடியோவில் இந்த நடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிருந்தா, கீகீ உள்ளிட்டவர்கள் இந்த நடனத்தை மேற்கொண்டுள்ளனர்.

படம் பிடித்த சாந்தனு
அவர்களுடன் வேறு சிலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். சிறப்பான வகையில் அமைந்துள்ள இந்த பாடலை படம் பிடித்துள்ளார் சாந்தனு. குறிப்பாக தன்னுடைய மனைவி கீர்த்தியை அழகாக படம் பிடித்துள்ளார். மிகவும் அழகாக காணப்படுகிறார் கீகீ .

பன்முகத் திறமை
நடனம், நடிப்பு என கலக்கி வரும் சாந்தனு தற்போது தன்னுடைய படம் பிடிக்கும் கலையையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது முருங்கைக்காய் சிப்ஸ் படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த திறமையும் வெளிப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











