Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினி பாணியில் நடிகர் 'மிர்ச்சி' சிவா திருமணம்
'சென்னை-28' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், ரேடியோ ஜாக்கியாக இருந்த சிவா. இதைத் தொடர்ந்து, 'சரோஜா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 'தமிழ் படம்' என்ற படம் மூலம் கதாநாயகன் ஆனார். சுந்தர் சி. டைரக்ட் செய்து சமீபத்தில் திரைக்கு வந்த 'கலகலப்பு' படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். இப்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடிக்கிறார்.
தில்லுமுல்லு வெளியானபோதுதான் ரஜினியின் திருமணம் நடந்தது. லதாவை காதலித்து மணம் புரிந்தார். தற்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடித்து வரும் 'மிர்ச்சி' சிவாவின் திருமணமும் அதே பாணியில் நடைபெறவுள்ளது. இதுவும் காதல் திருமணமாம்.
ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, கடந்த ஐந்து வருடமாக காதலில் மூழ்கியுள்ளார் சிவா. பேட்மிண்டன் வீராங்கனையான பிரியாதான் சிவாவின் மனம் கவர்ந்தவர். இப்போது இவர்களது காதல் திருமணத்தில் வந்து முடிகிறது. நவம்பர் 15ம் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாம்.
அலட்டிக் கொள்ளாத கேஷுவல் காமெடியைப் பலமாக கொண்டு நடித்து வரும் சிவாவின் மனம் கவர்ந்த பிரியா தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாராம்.