மாநகரம் ஸ்ரீக்கு இப்படியொரு மன நோயா?.. தமிழ்நாட்டிலேயே இல்லையாம்.. எங்கே இருக்கிறார்? நண்பர் பகீர்
சென்னை: ஸ்ரீ என அழைக்கப்படும் நடிகர் ஸ்ரீராம் நடராஜன் தமிழ்நாட்டிலேயே இல்லை என அவரது நெருங்கிய நண்பர் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ரூமில் இருந்துக் கொண்டு ஸ்ரீ வெளியிடும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கு எண் 18/9, வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் அவ்வளவு அமைதியாகவும் திறமையாகவும் நடித்த நடிகர் ஸ்ரீயா இப்படி போதைக்கு அடிமையாகி விட்டார் என பலரும் அவரைப் பற்றி பலவிதமாக பேசத் தொடங்கியுள்ளனர்.

நடிகர் ஸ்ரீக்கு வில் அம்பு படத்திலும் இறுகப்பற்று படத்திலும் நடித்ததற்கு சம்பளமே கொடுக்கவில்லை என்றும் தொடர்ந்து சினிமா அவரை ஒதுக்கி வந்த நிலையில், தான் இப்படி விரக்தியாகி ஆளே மாறிவிட்டார் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், ஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கு போன் செய்தால் கூட எடுக்கமாட்டேங்கிறார். ஆனால், அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்துவிட்டோம் என நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனே புலம்பினாரே: ராஜ் கமல் நிறுவனத்தில் தான் தனக்கு முழு சம்பளம் கிடைத்தது என நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றி விழாவில் பேசியது பலரையும் ஷாக் ஆக்கியது. ஆனால், உண்மையாகவே சினிமாவில் இதுதான் நடந்து வருகிறது என்கின்றனர். முன்னணி நடிகர்களுக்கே அட்வான்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு பல தயாரிப்பாளர்கள் சம்பளத்தை முழுமையாக கொடுக்காமல் ஏமாற்றி வருவது நடைபெற்றுக் கொண்டுதான் இருப்பதாக கூறுகின்றனர். நடிகர் ஸ்ரீயும் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவின் இறுகப்பற்று படத்தில் நடித்தபோது தனக்கு சம்பளம் தரவில்லை என பதிவிட்டு இருப்பது பஞ்சாயத்தைக் கூட்டியது. ஆனால், ஸ்ரீயை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரை தொடர்பு கொள்ள உதவி செய்தால் அவருக்குத் தேவையான உதவிகளை செய்வதாகவும் சம்பளம் தரவில்லை என்கிற புகார் சுத்த பொய் என்றும் விளக்கமளித்துள்ளார்.
எங்கே இருக்கிறார் ஸ்ரீ?: தமிழ்நாட்டிலேயே ஸ்ரீ இல்லை என்றும் ஹரியானாவில் உள்ள குரேகான் நகரில் தான் தற்போது ஸ்ரீ வசித்து வருவதாகவும் அவரது நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாகவும் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சை அளித்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார்.
இப்படியொரு மன நோயா?: schizophrenia என்கிற மன நோயால் ஸ்ரீ பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது காதில் யாரோ பேசிக் கொண்டிருப்பது போல தோன்றும் என்றும் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக தனிமையில் குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விரக்தியின் காரணமாக அவருக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்கின்றனர்.
ஸ்ரீயை மீட்போம்: நடிகர் ஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் அவர் இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டோம். விரைவில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்போம் என்றும் ஸ்ரீயின் நண்பர் கூறியுள்ளார். சினிமா மோகத்தால் இதுபோல பல ஸ்ரீக்கள் சீரழிந்து வருவதாகவும் சிலர் மட்டுமே இங்கே சகல வசதிகளுடன் உச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இளைஞர்கள் சினிமா மோகத்தால் சீரழியக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











