twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாஸ்மாக் வசூல் வேட்டை..சிபிராஜ் போட்ட டிவீட்.. கடையை மூடிட்டாங்களே!

    |

    சென்னை : நடிகர் சிபிராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் டாஸ்மாக் கலக்சனை பகிர்ந்து, கூடிய விரைவில் 200 கோடியை தொட்டுவிடும் என தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் தாண்டிப் போய் தற்போது கடைகளையும் மூடி விட்டனர்.

    முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால், அந்த படம் எப்படி இருக்கும். எவ்வளவு நாள் ஓடும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தன. அதன் அந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. ஆனால், தற்போது நிலையே வேறு ஆன்லைன் திரைப்பட விமர்சனம் போன்றவை வந்துவிட்டன.

    Actor Sibiraj posted on his Twitter page about the tasmac collection

    இதையும் தாண்டி தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலக்ஸன் அதாவது படத்தின் வசூல் எவ்வளவு என்பதில்தான் போட்டி உள்ளது. இப்பொழுது பெரிய ஹீரோக்களின் மவுசை பேசுவது பாக்ஸ் ஆபிஸ் கலக்ஸன்தான். இதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடையே போலியான பாக்ஸ் ஆபிஸ் கலக்ஸனை தயார் செய்வதிலும் போட்டி உண்டு.

    மலர் டீச்சர் டு மாரி வைஃப்.. திறமையான நடிகை சாய் பல்லவி.. டிரெண்டாகும் #HappyBirthdaySaiPallaviமலர் டீச்சர் டு மாரி வைஃப்.. திறமையான நடிகை சாய் பல்லவி.. டிரெண்டாகும் #HappyBirthdaySaiPallavi

    இது திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் ஒயின் ஷாபிற்கும் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலக்ஸன் வெளியாகிறது.ஆம்! கொரோனா தொற்றால் நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டன அதை தொடர்ந்து ஒயின் ஷாப்பும் மூடப்பட்டது.

    Actor Sibiraj posted on his Twitter page about the tasmac collection

    நீண்ட நாள் கழித்து தமிழ் நாட்டில் மே7 ஆம் தேதி ஒயின் ஷாப்கள் திறக்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் ஒயின் ஷாப்புக்கு முன்னால் அலைமோதியது. அதற்கு முன் தினம் தான் கர்நாடகாவில் 45 கோடி வசூல் ஆனது என செய்திகள் வந்தவுடன் இதை அசால்டாக தமிழ் நாடு அடித்து நொறுக்கிவிடும் என்று பல மீம்ஸ்கள் வந்தன. அதே போல் ஒரு நாள் முடிவில் கலக்ஸன் பற்றி தகவல் வெளியாகி உள்ளன.

    பிரபலங்கள் அனைவரும் தங்களின் வீட்டில் இருந்தபடியே பல பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அதே போல நடிகர் சிபிராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒயின் ஷாப்பின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஸனை பகிர்ந்தார். அந்த பதிவில் தமிழ் நாட்டில் முதல் நாள் வசூல் 170கோடியாக இருந்தது அதை தொடர்ந்து உத்திரபிரதேசம் 100 கோடி, ஆந்திரா 68 கோடி, கர்நாடகா 45 கோடி என ஒவ்வொரு மாநிலத்தின் சாதனை பட்டியலை பதிவிட்டுள்ளார்.

    Actor Sibiraj posted on his Twitter page about the tasmac collection

    Recommended Video

    தாலிய அறுக்க வெச்சிடீங்க | Director Amir Emotional Speech

    இந்த போட்டோவின் மேல் அனைத்து சாதனைகளையும் தமிழ் நாடு முறியடித்துள்ளது 200 கோடியை மிக விரைவில் தொட்டுவிடும் என கேப்ஷனை பதிவிட்டிருந்தார். பல பிரபலங்கள் டாஸ்மாக் திறந்ததை கண்டித்து பல பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்ற நிலையில் சிபிராஜ் பகிர்ந்துள்ள இந்த செய்தி மக்களிடையே அச்சத்தையும் ஆச்சரியத்தையும் தந்துள்ளது. தற்போது கோர்ட் உத்தரவுப்படி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

    English summary
    Actor Sibiraj posted on his Twitter page about the tasmac collection.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X