லண்டனில் ஆபரேஷன் முடிந்து ஹைத்ராபாத் திரும்பிய நடிகர் சித்தார்த்.. வந்த கையோடு செய்த வேலைய பாருங்க!

சென்னை: நடிகர் சித்தார்த் லண்டனில் அறுவை சிகிச்சை முடித்து ஹைத்ராபாத் திரும்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகர் சித்தார்த் அவ்வப்போது மத்திய அரசை சாடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் போட்டோவுக்கு பதில், நடிகர் சித்தார்த்தின் போட்டோவை பதிவிட்டு ரசிகர் ஒருவர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இதனால் கடுப்பான சித்தார் அந்த நெட்டிசனை விளாசி பதிவிட்டிருந்தார்.

தெலுங்கு படத்தில் சித்தார்த்

தெலுங்கு படத்தில் சித்தார்த்

நடிகர் சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் சர்வானந்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகா சமுத்திரம் படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி திரைக்கு வருகிறது.

மகா சமுத்திரம் டிரெய்லர்

மகா சமுத்திரம் டிரெய்லர்

இந்நிலையில் மகா சமுத்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த மகா சமுத்திரம் படத்தின் இயக்குனரான அஜய் பூபதி, நடிகர் சித்தார்த் அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், அதன் காரணமாகத் தான் அவர் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறினார்.

லண்டனில் அறுவை சிகிச்சை

லண்டனில் அறுவை சிகிச்சை

அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறியிருந்தார். ஆனால் எதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார். அதில் தனது உடல் நிலை குறித்த அப்டேட்டை தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார் சித்தார்த்.

நாட்டுக்கு திரும்பி விட்டேன்

நாட்டுக்கு திரும்பி விட்டேன்

அதாவது ஸ்டன்ட் காட்சியை படமாக்கும்போது காயம் அடைந்ததால், தனது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாக கூறியுள்ளார் நடிகர் சித்தார்த். இதுதொடர்பாக தனது போட்டோவை பகிர்ந்துள்ள சித்தார்த், "நாட்டுக்கு திரும்பி விட்டேன். ஹைதராபாத்தில் மகா சமுத்திரம் படத்தை முடிப்பதற்காக வந்துள்ளேன்.

அன்புக்கு நன்றி

அன்புக்கு நன்றி

உங்களின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நான் ஒரு ஸ்டன்ட் காட்சியின் போது முதுகில் காயம் அடைந்தேன். சில மாதங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளேன். எனது மருத்துவர்கள் மற்றும் பிசியோக்கள் அனைவரின் கவனமான கவனிப்புக்கும் மிக்க நன்றி. எனக்கு ஒரு அழகான வலுவான முதுகெலும்பு உள்ளது அதற்கும் நன்றி.

கொண்டாட ஒரு அற்புதமான காரணம்

கொண்டாட ஒரு அற்புதமான காரணம்

இப்போதைக்கு, நான் சினிமாவில் மிகவும் கடினமாக உழைத்த ஒரு அழகான படத்தை என் பார்வையாளர்களுடன் ரசிக்க தயாராக இருக்கிறேன். கொண்டாட ஒரு அற்புதமான காரணம். விரைவில் அனைவரையும் சந்திக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும் என்னை மிகவும் கவர்ந்தது. என் முழு மனது, உங்கள் சித்தார்த்" இவ்வாறு நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் அறிவுறுத்தல்

ரசிகர்கள் அறிவுறுத்தல்

சித்தார்த்தின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பலரும் நடிகர் சித்தார்த்தை ஓய்வெடுக்குமாறும் கூறி வருகின்றனர். நடிகர் சித்தார்த் தற்போது தமிழில் டக்கர் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X