சித்தார்த்துக்கு என்ன ஆச்சு? கையில் பெரிய கட்டு.. மேடையில் உடைந்து அழுதார்!

மும்பை: நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி 'ஆபரேஷன் சேஃபத் சாகர்' வெப் தொடர் வெளியாக உள்ளது. ஓனி சென் இயக்கத்தில் ஜாமி ஷெர்கில், சித்தார்த், தியா மிர்சா, பிரஜக்தா கோலி, அபய் வர்மா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள இத்தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்த விழாவில், வீரர் மறைந்த ஸ்குவாட்ரன் லீடர் அஜய் அஹுஜாவின் மனைவி ஆல்கா அஹுஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவரின் கண்ணீர் பேச்சை கேட்டு நடிகர் சித்தார்த் மேடையில் உடைந்து அழுதார்

ராணுவ வீரரின் மனைவி: இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்காக மறைந்த ராணுவ வீரின் மனைவி ஆல்கா அஹுஜா மேடைக்கு வந்த போது, அவர் மீது கொண்ட மரியாதையால் மேடையில் இருந்த சித்தார்த் உட்பட அனைத்து பிரபலங்களும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தனர். அப்போது பேசிய சித்தார்த், ஆல்கா மேடம், உங்களிடம் அனுமதி பெறாமல் நாங்கள் இந்தத் தொடரை நிச்சயம் எடுத்திருக்க மாட்டோம். இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்ததற்கு எங்கள் படக்குழு சார்பாக உங்களுக்கு மிகப்பெரிய நன்றி என்றார். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஆல்கா அஹுஜா, என்னிடம் அஜயின் வீடியோக்கள் எதுவுமே நினைவாக இல்லை. ஆனால், இப்போது இந்தத் தொடரின் மூலமாவது அஜயின் ஒரு அழகான பிம்பமும் நினைவும் எனக்குக் கிடைத்து இருக்கிறது என்றார். இதைக் கேட்ட அடுத்த நொடியே, நடிகர் சித்தார் கண்ணீரை அடக்க முடியாமல் மேடையிலேயே அழுதார்.

Siddharth cry stage
Photo Credit:

நடிகர் சித்தார்த் பேச்சு: அதைத்தொடர்ந்து பேசிய சித்தார்த், நமது நாட்டில் போரில் வீர மரணமடைந்த தியாகிகளின் வாழ்க்கையைத் திரையில் கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான விஷயம். ஏனெனில், அவர்கள் தங்களைப் பற்றிப் பேசவோ அல்லது தற்காத்துக் கொள்ளவோ இப்போது உயிரோடு இல்லை. ஒரு கற்பனையான கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் ஈஸியான விஷயம், ஆனால், ஒரு தியாகியின் நினைவுக்கு எந்தத் துரோகமும் செய்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தோம் என்றார்.

Siddharth cry stage
Photo Credit:

கையில் கட்டு: மேலும், இந்த வெப் தொடருக்கு அஜய்யின் மனைவி ஆல்கா மேடம் சம்மதம் தெரிவித்துவிட்டாரா? என்று நான் தயாரிப்பாளர்களிடம் கேட்டேன். அவர் சம்மதித்தார் என்றதும் தான் இதில் நடிக்கவே ஒப்புக்கொண்டேன் என்றார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் கையில் கட்டுடன் வந்திருந்த சித்தார், இது ஒரு சின்ன ஆபரேஷன் தான். வயசாயிடுச்சு இல்லைங்களா... அதான் என்று சிரித்துக் கொண்டே சமாளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X