குருமூர்த்தி போட்ட ட்வீட்.. பாய்ந்து பதில் போட்ட சித்தார்த்.. ஒரே சண்டை!
Recommended Video

சென்னை: ஆடிட்டர் குருமூர்த்தி போட்ட ட்வீட்டுக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்துள்ளார். இதை வைத்து ஒரு மினி சண்டை அங்கு ஓடிக் கொண்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகர் சித்தார்த். அவர் இப்போது கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் சைத்தான் கே பச்சா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் சித்தார்த்தின் டிவிட்டரில் ஒரு குட்டிச் சண்டை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆடிட்டர் குருமூர்த்தி போட்ட டிவீட்டுக்கு சித்தார்த் கோபத்துடன் பதில் டிவீட் போட சண்டை மூண்டு விட்டது.
26 வயதில் கோயங்காவுடன் எமெர்ஜென்சியை எதிர்த்த் போராடினேன். என்னை திட்டுபவர்கள் அப்போது பிறக்க கூட இல்லை. அம்பானி போலி ஆவணங்கள் தயாரித்து என்னை கைது செய்ய வைத்தார். போபர்ஸ் மற்றும் உழல் அரசியல் என்று தொடர்கிறது.. போலி சமத்துவ வாதிகளும், போலி நவீனத்துவ வாதிகளும் என்னை வெறுப்பது எனக்கு பெருமையாக உள்ளது என குருமூர்த்தி ட்வீட் செய்திருந்தார்.
இதைப் பார்த்து கோபத்துடன் பதில் போட்டிருந்தார் சித்தார். அதில், இந்த நாடு நீங்கள் பிறப்பதற்கு முன்பே வேற்றுமையில் ஒற்றுமையுள்ள ஜனநாயக நாடாக மாறி விட்டது என்று ஆரம்பித்து காட்டமான வார்த்தைகளை பிரயோகித்திருந்தார்.
அதேபோல் அய்யப்பன் கோவில் விவகாரம் கூறித்து குருமூர்த்தி ட்வீட் செய்ததற்கும் சித்தார்த் கோபம் காட்டியிருந்தார். "கடவுள் பழிவாங்கக்கூடியவர் இல்லை என நம்புபவர்களுக்கு தெரியும். ஆத்திகர்கள் கடவுள் இல்லை என்கிறார்கள். நீங்கள் பொருப்பில்லாமல், இப்படி தவறாக பேசுவதுதான் வருத்தமளிக்கிறது. கேரள வெள்ளம் தேசிய பேரிடர் என டிவீட்டில் கூறியிருந்தார் சித்தார்த்.
இந்த டிவீட்டுகளை வைத்து அங்கு ஒரு குட்டி கலாட்டாவே ஓடிக் கொண்டுள்ளது. சண்டையை விடுங்கப்பா.. கேரளாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க ஓடியாங்க!


Click it and Unblock the Notifications











