இந்தியில் பேசினார்கள்.. அத்துமீறினார்கள்.. விமானநிலையத்தில் சித்தார்த்துக்கு நடந்த அவமானம்!

சென்னை : மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎப் அதிகாரிகளால் நடிகர் சித்தார்த் அவமானப்படுத்தப்பட்டதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார் சித்தார்த்.

இந்தியன் 2 படத்தில்

இந்தியன் 2 படத்தில்

நடிகர் சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கிரைன் சரிந்து விபத்து, பட்ஜெட் பிரச்சனை போன்ற காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. கமலின் விக்ரமன் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து லைக்கா நிறுவனத்துடனான பிரச்சனை பேசி முடிக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

துன்புறுத்தினார்கள்

துன்புறுத்தினார்கள்

சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேசிவரும் சித்தார்த், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், மதுரை விமானநிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவர்கள் வயதான என் பெற்றோர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். அவர்கள் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

இந்தியில் பேசாதீங்க,ஆங்கிலத்தில் பேசுங்கள்

இந்தியில் பேசாதீங்க,ஆங்கிலத்தில் பேசுங்கள்

அவர்கள் எங்களிடம் இந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். இருப்பினும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள் என்று காட்டமான பதிவிவை பகிர்ந்துள்ளார். பதிவிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசை விமர்சித்தார்

மத்திய அரசை விமர்சித்தார்

நடிகர் சித்தார்த், கொரோனா இரண்டாவது அலை இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த போது மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர் கட்சிகளும் விமர்சித்து இருந்தார். திரையுலக பிரபலங்கள் அனைவரும் மௌனமாக இருந்த போது நடிகர் சித்தார்த் மட்டும் சமூக வலைதலங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் அவருக்கு பல கொலை மிரட்டல்களும் வந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X