அந்த எச்ச தனத்தை.. நான் செய்ய மாட்டேன்.. அதிரடியாக பதிலளித்த சித்தார்த்!

சென்னை: நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழி ரசிகர்களிடமும் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்து அவரை திக்குமுக்காட வைத்துள்ளார்.

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்திற்கு முன்பே கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் துணை இயக்குநராக பணியாற்றி உள்ளார் நடிகர் சித்தார்த். அந்த படத்தை தொடர்ந்து பாய்ஸ், உதயம் NH4, நூற்றெண்பது, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

Actor Siddharth latest interview trending on social media

நடிகர் சித்தார்த்: அண்மையில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்த இப்படத்தை அருண்குமார் இயக்கி இருந்தார். இதில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதையும் சித்தார்த் பெற்றார்.

என்னை ஈக்குவலா பார்க்கணும்: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், என்னை ஹீரோ சித்தார்த்தாக பார்த்த எந்த பெண்ணிடமும் நான் இரண்டாவது முறை பேசியது இல்ல, அது எனக்கு பிடிக்காது. என்னிடம் யாராவது பேச வேண்டும் என்றால், ஈக்குவலா என்னைப் பார்த்து பேச வேண்டும். அய்யோ... சித்து என்று அவர்கள் சொல்லும் போதே என்னுடைய பொருப்பு வேறுவிதமாக மாறிவிடுகிறது. இதனால், நான் அவர்களை என் தங்கையாகவோ, அக்காவாகவோ, அம்மாவாகவோத்தான் பார்ப்பேன் என்றார்.

அதுக்கு பேரு எச்ச: இதைத்தொடர்ந்து தொகுப்பாளினி நண்பனின் காதலியிடம் எப்போதாவது வழிந்து பேசி இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்க, சற்று டென்ஷனான சித்தார்த், நோ என்று சொல்லிவிட்டு, அதற்கு பேரு என்ன தெரியுமா எச்ச என்று சரியான பதிலடி கொடுத்தார். மேலும் பள்ளியில் படிக்கும் போது சிகரெட் பிடித்தீர்களா என்ற கேள்விக்கு யெஸ் என பதில் அளித்தார். நடிகர் சித்தார்த் அதிரடியாக பதில் அளித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

விரைவில் திருமணம்: நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் மகா சமுத்திரம் என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் திரைப்பட விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்றுவந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் இருவருக்கும் ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X