கஸின் திருமணத்தில் கலக்கலாய் ஆட்டம் போட்ட பிரபல நடிகர்... தீயாய் பரவும் வீடியோ!
மும்பை: பிரபல நடிகர் தனது உறவினர் திருமணத்தில் கலக்கலாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாடலாகவும் நடிகராவும் வலம் வருபவர் சித்தார்த் மல்ஹோத்ரா. 18 வயதில் மாடலிங்கை தொடங்கிய சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை.
பின்னர் கரன் ஜோஹரிடம் உதவி இயக்குநராக சேர்ந்த சித்தார்த் மல்ஹோத்ரா, அவர் இயக்கிய மை நேம் இஸ் கான் படத்தில் பணிபுரிந்தார்.

ஸ்டுடன்ட் ஆஃப் தி இயர்
பின்னர் கரண் ஜோஹரின் ஸ்டுடன்ட் ஆஃப் தி இயர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சித்தார்த் மல்ஹோத்ரா. அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஹஸீ தோ ஃபஸி, ஏக் வில்லன், கபூர் அன்ட் சன்ஸ், மரிஜாவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த் மல்ஹோத்ரா.

ஸ்பை த்ரில்லர்
தற்போது மிஷன் மஞ்சு என்ற படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த் மல்ஹோத்ரா. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்பை த்ரில்லர் படமான இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கஸின் திருமணத்தில்
மேலும் யோதா என்ற படத்திலும் தேங்க் காட் என்ற படத்திலும் நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. 36 வயதான சித்தார்த் மல்ஹோத்ரா ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது கஸின் திருமணத்தில் பங்கேற்ற போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மெரூன் நிற டர்பன்
இதில் கறுப்பு நிற ஷெர்வாணி அணிந்துள்ள சித்தார்த் கான்ட்ராஸ்ட்டாக தலையில் மெரூன் நிற டர்பன் அணிந்துள்ளார். இந்த காஸ்ட்யூம்மில் செம ஹேண்ட்ஸமாக உள்ளார் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. இந்த போட்டோவுக்கு தில் கி ஷாதி என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
Recommended Video

ஷெர்ஷா பட பாடல்
அதோடு திருமணத்தில் உறவினர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ள வீடியோவையும் சித்தார்த் மல்ஹோத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ஷெர்ஷா படத்தில் இடம் பெற்ற ரஞ்ஜா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











