Actor Siddharth: த்ரிஷாவோட லவ் சீனா.. ஜாலி மாமான்னு சொல்லுவாங்க.. கடுப்பை வெளிப்படுத்திய சித்தார்த்!

சென்னை: நடிகர் சித்தார்த், தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் சிறப்பான பல கேரக்டர்களை ஏற்று நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் அதிகமான கவனங்களை பல்வேறு தரப்பினரிடையேயும் ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் தன்னுடைய அண்ணன் மகளுக்கும் அவரது சித்தாப்பாவிற்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் சித்தார்த்.

அடுத்ததாக இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சித்தார்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஒன்லைனை சித்தார்த்திடம் கூறி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓகே வாங்கியுள்ளதாகவும் தொடர்ந்து அந்த கதைக்களத்தை அவர் உருவாக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்களில் நடிப்பதுடன் பொதுவெளியிலும் நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் சித்தார்த். தன்னை பாதிக்கும் விஷயங்களில் அவர் தொடர்ந்து கண்டனங்களை பகிர்ந்து வருகிறார்.

Actor Siddharth opens up about the direction and acting and hails Mani ratnam is the Boss

நடிகர் சித்தார்த்: நடிகர் சித்தார்த் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். நடிப்பில் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டிவரும் சித்தார்த் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பாய்ஸ் படத்தின்மூலம் அறிமுகமான சித்தார்த், தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். ரங் தே பசந்தி மற்றும் பொம்மரில்லு படங்கள் மூலம் இந்தி மற்றும் தெலுங்கில் அறிமுகமான சித்தார்த், தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் சிறிது காலங்கள் நடிக்காமல் இருந்த சித்தார்த், காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார்.

பன்முகத் திறன்: சித்தார்த் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த ஆண்டில் வெளியான சித்தா படம் மிகப்பெரிய வெற்றியையும் சிறப்பான விமர்சனங்களையும் பெற்றது. இந்தப் படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பின்மூலம் அனைவரையும் கவர்ந்தார் சித்தார்த். தன்னுடைய அண்ணன் மகளுக்கும் தனக்குமான ஆத்மார்த்தமான உறவை இந்தப் படத்தில் அவர் பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தின்மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்திருந்தார். முன்னதாக இந்தப் படத்திற்காக நடிகர் கமல்ஹாசனும் சிறப்பான பிரமோஷனில் ஈடுபட்டிருந்தார்.

இந்தியன் 2 படத்தில் சித்தார்த்: இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும் இணைந்து நடித்துள்ளார். த்ரிஷாவுடன் இணைந்து ஆயுத எழுத்துப் படத்தில் நடித்திருந்தார் சித்தார்த். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய பேட்டியொன்றில் இதுகுறித்து சித்தார்த் மனம் திறந்துள்ளார். ஆயுத எழுத்து படத்தில் த்ரிஷாவுடன் தான் இணைந்து நடித்தது குறித்து த்ரிஷாவுடன் லவ் சீனா, ஜாலி மாமா என்றுதான் அனைவரும் தன்னிடம் கூறுவார்கள் என்றும் ஆனால் ஒரு இயக்குநர் மற்றும் நடிகர்களின் வேலை இதைத்தாண்டி செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

த்ரிஷாவுடன் ஜோடி: படபடக்கும் வெயிலில் சுட்டெரிக்கும் மணலில் படுக்க வைத்து ஒரு படைப்பாளி, இந்த மூஞ்சியும் அந்த மூஞ்சியும் எந்த ஆங்கிளில் வைத்தால் பார்க்கும் மூஞ்சிக்கு பிடிக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பார் என்று தெரிவித்துள்ளார். அப்ப இந்த மூஞ்சியும் அப்பா, அடி விழுந்தால் அவளுக்குத்தான் விழும், அவள்தான் பக்கத்தில் இருக்கிறாள் என்று நினைக்கும் என்றும் சித்தார்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய அசிஸ்டெண்ட்டை மணிரத்னம் அழகாக காட்ட முயற்சித்துக் கொண்டிருந்ததாகவும் அந்த நிலையில் தனக்கு எப்படி இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மணி சார் எப்பவுமே பாஸ்: இதெல்லாம் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயங்கள் என்றும் மணி சார் எப்போதுமே பாஸ் என்றும் சித்தார்த் தன்னுடைய பேட்டியில் மேலும் கூறியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்க காத்திருக்கிறார் சித்தார்த். சித்தா படம் கொடுத்த தெம்பில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியன் 3 படமும் உருவாகியுள்ள நிலையில், அந்தப் படத்திலும் இவர் இருக்கிறாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும். இதனிடையே அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் இணையவுள்ளார் சித்தார்த். விரைவில் இதன் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X