பாக்ஸ் ஆபிஸ் கட்டுக்கதை.. எவ்வளவு கமிஷன் வாங்குறீங்க? கடுப்பில் நடிகர் சித்தார்த்.. சரமாரி கேள்வி!

சென்னை: பாக்ஸ் ஆபிஸ் புள்ளி விவரங்கள் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிடப்படுவதாக நடிகர் சித்தார்த் சரமாரியாக விளாசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சித்தார்த், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வருகிறார்.

சித்தார்த் டிவிட்

சித்தார்த் டிவிட்

குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார் சித்தார்த். இதனால் சமூக வலைதளத்தில் அடிக்கடி விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். அண்மையில் பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு டிவிட்டியிருந்தார் சித்தார்த் .

நெட்டிசன்களுடன் மல்லுக்கட்டு

நெட்டிசன்களுடன் மல்லுக்கட்டு

அவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா மரணமடைந்த போது தவறுதலாக ஒரு நெட்டிசன் சித்தார்த்தின் போட்டோவை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து கடுப்பான சித்தார்த் அந்த நெட்டிசனையும் விளாசியிருந்தார். இதேபோல் பலமுறை நெட்டிசன்களுடன் நேருக்கு நேர் மல்லுக்கட்டியுள்ளார் சித்தார்த்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இதேபோல் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கிய போது, சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் நடிகர் சித்தார்த். இந்நிலையில் படங்களின் வசூல் பற்றிய பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் குறித்து கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் சித்தார்த். அவரது இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எவ்வளவு கமிஷன்?

எவ்வளவு கமிஷன்?

நடிகர் சித்தார்த் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து பொய்யான தகவல் வெளியிடுவதற்கு எவ்வளவு கமிஷன் அல்லது ரேட் பெற்று வருகிறீர்கள்? 'முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் காலம் காலமாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் குறித்து பொய் கூறி வருகிறார்கள். ஆனால் தற்போது வர்த்தக பணியாளர்கள், மீடியாக்கள் என பலர் அத்தனை மொழிகளிலும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டை போலியாக பகிர்ந்து வருகிறார்கள்.

சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

எல்லா மொழிகளும், அனைத்து தொழில்களும்.. ஒரே மாதிரியானவை. பான் இந்தியா நேர்மையற்றது என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸ் தகவல் குறித்து தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள் என்ற நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X