Don't Miss!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்.. கடுப்பான நடிகர் சித்தார்த்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தனக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதை பார்த்த நடிகர் சித்தார்த் செம கடுப்பாகியுள்ளார்.
Recommended Video
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் நடிகர் சித்தார்த். அவரது இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
ஷாருக்கான், அட்லி படத்தின் தலைப்பு இதுதான்… வெளியானது மாஸான அப்டேட் !
பின்னர் இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்பை பெற்றார். பாய்ஸ் படத்தில் நடிகை ஜெனிலியாவுக்கு ஜோடியாக நடித்தார்.

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகம்
பாய்ஸ் படத்தில் அவரது நடிப்பை பார்த்த மணிரத்னம் பின்னர் அவரது ஆயுத எழுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதனை தொடர்ந்து தெலுங்கில் நுவுவொஸ்தானன்ட்டே நெனொத்தன்ட்டனா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பாலிவுட்டிலும் என்ட்ரி
தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்த சித்தார்த், அடுத்த ரங் தே பசந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த்.

கடைசியாக தமிழில் அருவம்
கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு சிவப்பு மஞ்சள் பச்சை, மற்றும் அருவம் ஆகிய படங்கள் சித்தார்த் நடிப்பில் வெளியானது. அதன் பிறகு சித்தார்த்தின் நடிப்பில் எந்த படம் வெளியாகவில்லை. தற்போது மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த்.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவ்
இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து டக்கர் என்ற படத்திலும் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் சித்தார்த். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகர் சித்தார்த் தொடர்ந்து மத்திய அரசை சாடி டிவிட்டி வருகிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்
இதனால் நெட்டிசன்களின் கோபத்திற்கும் ஆளாகி வருகிறார் சித்தார்த். நடிகர் சித்தார்த்தை நெட்டிசன்கள் கடுமையான விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான போட்டோ ஒன்றை நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சித்தார்த்துக்கு கண்ணீர் அஞ்சலி
அதாவது, நெட்டிசன் ஒருவர் RIP Siddharth என குறிப்பிட்டு அழும் ஈமோஜியுடன் அவரது போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த நடிகர் சித்தார்த் "இந்த ட்வீட் மற்றும் பதில்கள். இந்த நாட்களில் எதுவும் நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடாது என்று நினைக்கிறேன். நான் வாயடைத்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

வெறுப்பு மற்றும் துன்புறுத்தல்
தனக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டதை 'இலக்கு வைக்கப்பட்ட வெறுப்பு என குறிப்பிட்டுள்ளார் நடிகர் சித்தார்த். இது தொடர்பான அவரது பதிவில் இலக்கு வைக்கப்பட்ட வெறுப்பு மற்றும் துன்புறுத்தல். நாங்கள் எதில் குறைந்துவிட்டோம் என்றும் பதிவிட்டுள்ளார் சித்தார்த்.

எதையும் முடிவு செய்யாதீர்கள்
அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் சித்தார்த் சுக்லா மரணத்தால் ஏற்பட்ட குழப்பத்தில் இது நடந்திருக்கலாம் என்றும் போட்டோ குழப்பத்தால் அந்த நபர் உங்கள் போட்டோவை பதிவிட்டிருக்கலாம். உடனடியாக எதையும் முடிவு செய்யாதீர்கள் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.

நான் ஸ்டேட்டஸ் வைத்து விட்டேன்
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் நீங்கள் இன்னும் சாகவில்லையா என்றும் நான் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டேனே என்று கூறியும் கலாய்த்துள்ளனர்.

ஜங்க்ளீஸிடம் நாம் பேச முடியாது
இன்னும் சிலர் இதை விடுங்கள் சித்தார்த் என அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆறு அறிவு உடைய மனிதர்களிடம் நாம் பேசலாம் ஜங்க்ளீஸிடம் நாம் பேச முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.