சி.எஸ்.கே ஜெர்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு… ஆர்வத்தில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் சிம்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் வரும் 19ந் தேதி தொடங்க உள்ள நிலையில்,சிஎஸ்கே ஜெர்ஸியை போட்டுக்கொண்டு சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும், சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் என்ன சர்ப்ரைசா இருக்கும் என்று மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்து வருகின்றனர்.

சிலம்பரசன்

சிலம்பரசன்

எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஏனோ, தானோ என்று இருந்த சிம்பு தற்போது சூறாவளிப்போல சுழன்று சுழன்று நடித்து வருகிறார். செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவாகத்தான் வருவேன் போன்ற திரைப்படத்தில் பார்ப்பதற்கு அங்கிள் போல இருந்தார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்து, இனி சிம்பு அவ்வளவு தான் என்ற பேச்சுக்களும் அடிபட்டன. ஆனால் பொங்களுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து நடித்திருந்தார்.

CSK ஜெர்ஸி

CSK ஜெர்ஸி

புது மனிதனாக அவதாரம் எடுத்து இருக்கும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் CSK x STR சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள் என்றும், சர்ப்ரைஸ் என்னனு கண்டுபிடிங்க என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால், சிம்புவின் ரசிகர்கள் சப்ரைஸ் என்னவா இருக்கும் என்று யோசித்த நிலையில், சிம்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்பம் பாடல் ஒன்றை பாடி உள்ளதாகவும், அப்பாடல் விரைவில் வெளியிட உள்ளதை தான் சிம்பு இவ்வாறு சூசகமாக குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு 48

சிம்பு 48

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியை போட்டு அசத்தல போட்டோ போட்ட இந்த நேரத்துல, சிம்பு48 திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் நாளை வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சிம்பு நடிக்க உள்ளார். ஆரம்பமே அசத்தல் என்பதற்கு ஏற்ற போல, மாஸான மோஷன் போஸ்டருடன் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மாநாடு எப்போ ரிலீஸ்

மாநாடு எப்போ ரிலீஸ்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அரசியல் த்ரில்லர் படமான மாநாடு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடித்துள்ளர். இப்படத்தின் பாடல் வெளியாகி வைரலானது. அதேபோல ஹான்சிகாவுடன் நடித்த மஹா திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சும்மா உடலை மெழுகாக உருக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தையும் கைவசம் வைத்துள்ளார். பல வருடங்களுக்கு பின், நடிகர் சிம்பு ஓய்வில்லாமல் நடித்து வருவதும், அவரது படங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி வருவதும் சிம்பு ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X