நடிகர் சிம்புவுக்கு என்ன ஆச்சு? திடீர் காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் சிம்புவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

உடல் எடையை கணிசமாக குறைத்து தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

சிம்புவுக்கு காய்ச்சல்

சிம்புவுக்கு காய்ச்சல்

நடிகர் சிம்புவுக்கு திடீரென வைரல் ஃபீவர் ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார் சிம்பு.

கொரோனா பாதிப்பா

கொரோனா பாதிப்பா

மாநாடு படம் வெற்றியடைந்த நிலையில், மீண்டும் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கில் நடிக்கத் தொடங்கிய நடிகர் சிம்புவுக்கு திடீரென காய்ச்சல் பரவியதும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? என சந்தேகம் கிளம்பியது. ஆனால், சிம்புவுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகத்தான வெற்றி

மகத்தான வெற்றி

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 3 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு வெளியான டைம் லூப் திரைப்படமான மாநாடு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று மகத்தான வெற்றி அடைந்து திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினரை பாராட்டினர்.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

சிம்புவின் உடல் எடை அதிகரித்து விட்டது. அவர் முன்பை போல நடனமாட முடியாது, நடிக்க முடியாது என விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடின உடற்பயிற்சியின் மூலம் தனது உடல் எடையை கணிசமாக குறைத்தார் சிம்பு. ஈஸ்வரன், மாநாடு படங்களை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளில் ஆளே அடையாளம் தெரியாதவர் போல மாறி விட்டார்.

ரெஸ்ட் எடுப்பது இல்லை

ரெஸ்ட் எடுப்பது இல்லை

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும். நமக்காக இத்தனை ஆண்டுகள் காத்திருக்கும் ரசிகர்களுக்காக நடிக்க வேண்டும் என வெந்து தணிந்தது காடு, பத்து தல, மஹா, கொரோனா குமார் என ஒரு பெரிய லைன் அப்பையே வைத்துக் கொண்டு நடித்து வரும் சிம்பு ரெஸ்ட் எடுக்காமல் நடித்து வருவதால் தான் சற்றே உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளதாகவும் ஓரிரு நாளில் மீண்டும் ஷூட்டிங்கிற்கு சிம்பு கிளம்பி விடுவார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X