Actor Simbu: சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம்.. இன்று வெளியாகும் STR48 படத்தின் பர்ஸ்ட் லுக்!
சென்னை: நடிகர் சிம்பு அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் STR48 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் சிம்பு ஹீரோ மற்றும் வில்லன் என இரு கேரக்டர்களில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் அதிக காலத்தை எடுத்துக் கொண்டதால் படத்தின் சூட்டிங் துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் உள்ளிட்ட பல பயிற்சிகளை வெளிநாட்டில் மேற்கொண்டு வந்த சிம்பு, படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ளார். நாளைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், தற்போது படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமும் அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் STR48 படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து கொரோனா குமார் என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்தப் படம் டிராப் ஆகியுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தற்போது STR48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில்ர வெளியான நிலையில் வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் அதிக கால தாமதத்தை ஏற்படுத்தியது.
STR48 படம்: இதனால் படம் டிராப் ஆகிவிட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசனோ, சிம்புவோ, தேசிங்கு பெரியசாமியோ எதுவும் கூறவில்லை. இந்தப் படத்திற்காக சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் அதிக மெனக்கெடல்களை மேற்கொண்டனர். வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்த படத்திற்காக நீண்ட தலைமுடியை வளர்த்துள்ள நடிகர் சிம்பு, மார்ஷியல் ஆர்ட்ஸ், குதிரையேற்றம் போன்றவற்றை வெளிநாடுகளில் பிராக்டீஸ் செய்து வந்தார். இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்: நாளைய தினம் நடிகர் சிம்புவின் பிறந்தநாளையொட்டி இன்று மாலை 5 மணியளவில் STR48 படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமும் இதுகுறித்து அறிவித்துள்ளது. இதனிடையே இன்று மாலை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் சிம்புவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் செட்கள் அமைக்கப்பட உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இதுவும் இந்தப் படத்தின் சூட்டிங் தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

பீரியட் ஆக்ஷன் படம்: நடிகர் சிம்புவின் இந்தப் படத்தில் அவர் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பீரியட் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இருந்து இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் சிம்புவின் கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்துவரும் சிம்புவிற்கு இந்தப் படம் மேலும் சிறப்பை சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











