Simbu: டேய் 2கே கிட்ஸ்.. சவால் விட்ட சிம்பு.. நாளைக்கு 6 மணிக்கு சம்பவம் இருக்கு என அறிவிப்பு!
சென்னை: நடிகர் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்த படங்களை ஹாட்ரிக் வெற்றியாக கொடுத்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவர் எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் இணைய உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலை காணப்படுகிறது. இதனிடையே கமல்ஹாசனின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக நடிகர் சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

STR48 படம்: எஸ்டிஆர் 48 படத்திற்காக நீண்ட தலைமுடியை வளர்த்து வந்த சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளையும் வெளிநாட்டில் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இந்த படம் தற்போது நடக்குமா என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் அவரது வளர்ப்பு மகனாக லீட் கேரக்டரில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் எஸ்டிஆர் 48 படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சிம்பு புதிய போஸ்ட்: முன்னதாக இந்த படத்தின் போஸ்டருடன் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதில் ஹீரோவாகவும் வில்லனாகவும் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படம் குறித்து நடிகர் சிம்பு நேற்றைய தினம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படம் மன்மதன், வல்லவன், வெந்து தணிந்தது காடு படங்களின் கூட்டுக் கலவையாக உருவாக உள்ளதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்து நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்க உள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்றைய தினம் அறிவித்துள்ளார்.
நாளை வெளியாகும் அறிவிப்பு: மேலும் டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு ஷார்ப்பா, மாலை 6.06 மணிக்கு வரேன் என்று அவர் இந்த பதிவில் கூறியுள்ளார். இது அவரது புதியப்படத்திற்கான அறிவிப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. நேற்றைய தினமே இதற்கான முன்னோட்டத்தையும் அவர் தெரிவித்துள்ள நிலையில், இந்தப் புதிய படம் குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தலைவன் ஆன் தி வே என்றெல்லாம் இந்த பதிவின்கீழ் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











