Simbu birthday: சிம்பு பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.. என்ன வயசு தெரியுமா?
சென்னை: நடிகர் சிம்பு நாளைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே 6 மாதத்திலிருந்து படங்களில் நடித்துவரும் சிம்பு நாளைய தினம் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி அவரது ரசிகர்களும் பல்வேறு கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர். தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என ஹாட்ரிக் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள சிம்பு, தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் STR48 படத்தில் கமிட்டாகியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போதுதான் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நாளைய தினம் சிம்பு பிறந்தநாளையொட்டிSTR48 படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சிம்புவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் ரத்தம் மற்றும் யுத்தம் என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். வரலாற்று பின்புலத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேறு கேரக்டர்களிலும் சிம்புவே நடிக்கவுள்ளார். படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் சில தினங்களில் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு சர்ச்சை நாயகன் என்றே தமிழ் சினிமாவில் பெயரெடுத்தவர். 6 மாத குழந்தையாகவே தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கியவர். தன்னுடைய தந்தையின் படங்களில் குழந்தையாக, சிறுவனாக நடித்துவந்த சிம்பு, தொடர்ந்து நாயகனாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமையுடன் வலம் வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அவரது ஹாட்ரிக் வெற்றி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
STR48 படம்: இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் STR48 படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. வரலாற்று பின்புலத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேறு ரோல்களில் சிம்பு நடிக்கவுள்ளார். நாளைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி இன்று இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிரட்டலான இந்த லுக்கை வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், சிம்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் ரத்தம் மற்றும் யுத்தம் என்றும் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். இந்த லுக்கில் சிம்புவின் இருவேறு ரோல்களின் லுக் மிரட்டலாக அமைந்துள்ளது.

40வது பிறந்தநாள்: கமல்ஹாசனின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள சிம்பு, தன்னை எப்போதும் நம்புவதற்கு நன்றி என்றும் கூறியுள்ளார். நாளைய தினம் சிம்புவின் 40வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முன்னதாக மாநாடு படத்தில் சிம்புவுடன் இணைந்து பணியாற்றியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் STR48 படத்திற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் சிம்புவிற்கு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்: நாளைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் அவரது போஸ்டர்களை வைக்க அவரது ரசிகர்கள் திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். படம் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள நிலையில் படத்தின் 90 சதவிகித சூட்டிங் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு உருவாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து வரலாற்று பின்புலங்களில் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், தமிழில் 1000 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டும் என்று இப்போதே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











