For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹேண்ட்சம் லுக்கில் சிம்பு… இதயத்தை பரிசளிக்கும் ரசிகைகள்!

  |

  சென்னை : கலர் கலர் உடையில் செம ஸ்டைலாக இருக்கும் வீடியோவை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  பிரபல ஆன்லைன் தளமான மிந்த்ரா நிறுவனத்தின் தமிழக தூதராக இணைந்துள்ளார்.

  அந்த நிறுவனத்தில் விளம்பரத்திற்கு ஹாலிவுட் ஹீரோ போல ஹேண்ட்சம் லுக்கில் இணையத்தில் திணறவிட்டுள்ளார்.

  காதலிக்கு அசத்தலாய் பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்பைடர் மேன் ஹீரோ டாம் ஹாலண்ட்! காதலிக்கு அசத்தலாய் பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்பைடர் மேன் ஹீரோ டாம் ஹாலண்ட்!

  சிக்ஸ் பேக்கில்

  சிக்ஸ் பேக்கில்

  நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடனக் கலைஞர் என பன்முகத் திறமை கொண்ட நடிகரான சிம்பு தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் உள்ளார். இயக்குனர் டி.ராஜேந்தரின் மகனான சிம்பு சிறு வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் உடல் எடை கூடி பருமனான சிம்பு சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்து மாஸ் காட்டி விட்டார். சமீபத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அவரின் உடல் தோற்றத்தில் உள்ள மாற்றத்தைப் பற்றி அவரின் ரசிகர்கள் கூட புகழ்ந்தனர்.

  தீவிர உடற்பயிற்சி

  தீவிர உடற்பயிற்சி

  சிம்பு101 கிலோவில் இருந்து தனது எடையை தொடர்ந்து முயற்சி செய்து தற்போது 7௦ கிலோவாக உள்ளார். கிட்டத்தட்ட 30 கிலோவுக்கும் மேல் அவர் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார். எடையைக் குறைக்க வேண்டும் என்று கடந்த நவம்பரிலிருந்து தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டார்.

  விறுவிறுப்பான படப்பிடிப்பு

  விறுவிறுப்பான படப்பிடிப்பு

  கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் நாயகியாக கயடு லோஹர் நடித்து வருகிறார். சிலம்பரசனின் அம்மாவாக முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

  சிம்புவை பாராடிய கௌதம் மேனன்

  சிம்புவை பாராடிய கௌதம் மேனன்

  கௌதம் மேனன் தனத வழக்கமான பாணியிலிருந்து விலகி, புதிய களத்தில் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இரண்டாவது போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பாரட்டை பெற்றது. இந்த போஸ்டர் வெளியிட்ட கௌதம் மேனன் சிம்புவை வெகுவாக பாராட்டி இருந்தார். ஒரு அற்புதமான நடிகர் பணிபுரியும்போது அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது. சிலம்பரசன் மற்றும் இதை மிகவும் சுலபமானதாக மாற்றும் பல அற்புதமான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படப்பிடிப்பில் இருப்பது மிகவும் அருமையான விஷயம் என்று அதில் பதிவிட்டு இருந்தார்.

  சிம்பு மீது புகார்

  சிம்பு மீது புகார்

  vசமீபத்தில் சிம்புக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டது. நடிகர் சிம்பு படப்பிடிப்புகளில் சரியாக கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன. அவரது நடவடிக்கையால் நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், இதனால் அவரின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது எனவும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

  ரெட்கார்டு நீக்கம்

  ரெட்கார்டு நீக்கம்

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவித்திருந்தது. ஆனால் சிம்புவிடம் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான படங்களில் மிகவும் ஈடுபாடுன் நடித்து வருகிறார்.

  விளம்பரத்தில்

  விளம்பரத்தில்

  தற்போது சிம்பு பிரபல ஆன்லைன் தளமான மிந்த்ரா நிறுவனத்தின் தமிழக தூதராக இணைந்துள்ளார் இதுகுறித்த ப்ரோமோ ஒன்றை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அதே பழைய ஸ்டைல் போதவே போதாது... யூனிக் ஸ்டைல் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்ல கலக்குங்க என்று அந்த வீடியோவில் செம ஸ்டைலாக இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  English summary
  Simbu looks super smart and stylish in his clean shaven look and he manages to captivate the viewers with his charming screen presence.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X