வெந்து தணிந்தது காடு படத்துக்கு அப்புறமா அடுத்த முடிவு... சிம்புவின் வேற லெவல் திட்டம்
சென்னை : நடிகர் சிம்புவிற்கு மாநாடு படம் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது.
இதையடுத்து நிற்க நேரமின்றி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் சிம்பு.
தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

சிம்புவிற்கு டாக்டர் பட்டம்
நடிகர் சிம்பு 6 மாத குழந்தையாக இருந்ததிலிருந்து நடித்து வருகிறார். இதையொட்டி சமீபத்தில் அவருக்கு வேல்ஸ் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்தது. மாநாடு படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றி மற்றும் டாக்டர் பட்டம் உள்ளிட்டவை சிம்புவை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சிறப்பான மாநாடு படம்
மன்மதன் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் சிம்புவிற்கு மிகுந்த ஏற்றத்தை கொடுத்துள்ளது. டைம் லூப் அடிப்படையில் வெளியான இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

குவியும் பட வாய்ப்புகள்
இந்நிலையில் சிம்புவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி மிகுதியான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெந்து தணிந்தது காடு படம்
படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து வித்தியாசமான கெட்டப்பில் காணப்படுகிறார் சிம்பு. படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. எப்போதும் காதல் கதைகளை சிறப்பாக கொடுத்துவரும் கௌதம் மேனன் இந்தப் படத்தில் வித்தியாசமான கதையுடன் களமிறங்கியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் சிம்பு. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் கதைகளையும் கேட்டு வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

பத்து தல படத்தின் சூட்டிங்
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ள பத்து தல படத்தின் படப்பிடிப்பில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் சிம்பு இணையவுள்ளதாக படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கன்னடத்தில் கடந்த 2017ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளது.
Recommended Video

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு
படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், சிம்பு தற்போது சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கியமான கேரக்டரில் கௌதம் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications