Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாமியே சரணம் ஐயப்பா.. ஈஸ்வரன் படம் வெற்றி பெற மலையேறும் சிம்பு!
சென்னை : விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் மாஸ்டர் படத்துடன் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாக உள்ளது.
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்றும் சிம்புவின் வெற்றியை பார்க்க திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆவலுக்கு நம்பிக்கை தரும் வகையில் சுசிந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் உருவாகி உள்ளது.
பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனா.. கட்டியணைத்து லிப்லாக் கொடுத்து வரவேற்ற கணவர்.. க்யூட் வீடியோ!
பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் இப்பொழுது சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டு கொண்டு தியானத்தில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் செமயாக வைரலாகி வருகிறது.

நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே
எத்தனைத் தோல்வி திரைப்படங்கள் கொடுத்தாலும் சிம்புவுக்கு மட்டும் ரசிகர்கள் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் நிலையில், சிம்புவின் அசைக்க முடியாத சொத்தாக அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

திரையுலகமே அதிர்ந்து
வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் உடல் எடை மொத்தமும் கூடி ஆளே டோட்டலாக மாறிப்போன சிம்புவை பார்த்து திரையுலகமே சிம்பு இனி அவ்வளவுதான் என பேசிக் கொண்டிருக்க, மாஸா ஸ்டைலா கெத்தா எடையை குறைத்து இப்பொழுது ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து இருக்கும் சிம்புவைப் பார்த்து அதே திரையுலகம் அதிர்ந்து போயுள்ளது

முன்னணி இயக்குனர்
மேலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பும் இப்பொழுது தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் அவ்வப்போது கசிந்து வைரலாகி வரும் நிலையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
சிம்பு எது செய்தாலும் கோலிவுட்டில் ட்ரெண்டாகி வரும் நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வித்தியாசமான கெட்டப்பில் இதுவரை பார்த்திராத லுக்கில் வெளியாகி இணையதளத்தை தெறிக்கவிட்டு வைரலானது.

சபரிமலைக்கு மாலை
இந்நிலையில் இப்பொழுது சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் கருப்பு சட்டை கருப்பு வேஷ்டியுடன் உட்கார்ந்து இருக்கின்றவாறு சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வைரலாகி வரும் நிலையில், ஏற்கனவே மாநாடு படப்பிடிப்பு நன்றாக செல்ல வேண்டும் என இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோருடன் சிம்பு சபரிமலைக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.