Actor Simbu: ஆன்மீக பயணம் செல்லும் சிம்பு.. என்ன இப்படி இறங்கிட்டாரு!

சென்னை: நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தில் செப்டம்பர் 22ம் தேதிவரை அவரது போர்ஷன்கள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தப் படத்தில் தொடர்ந்து அதிகமான கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார் சிம்பு.

முன்னதாக சிம்புவின் நடிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், அடுத்தப் படத்தில் நடிக்கவும் சிம்பு தயாராகி வருவதாகவும் அடுத்தடுத்த இயக்குநர்களின் கதைகளை கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Simbu Thug life movie Kamal haasan

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் நடிக்க துவங்கி தற்போது 40 வயதிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். சில காலங்கள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சிம்பு மீண்டும் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் கமிட்டாகி இருந்தார் சிம்பு. இந்த படத்திற்காக மிக அதிகமான மெனக்கெடல்களையும் அவர் செய்திருந்தார். மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் ஈடுபட்ட அவர், படத்திற்காக நீண்ட தலைமுடியை வளர்த்திருந்தார்.

தக் லைஃப் படத்தில் சிம்பு: இந்த படத்திற்காக அவர் மிகப்பெரிய அளவில் தயாராகி வந்த நிலையில் இந்த படம் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் முடங்கியுள்ளது. இந்த படம் குறித்தும் படத்தின் ஷூட்டிங் குறித்தும் தெரிந்துக் கொள்ள சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஆன்மீக சுற்றுப்பயணம்: இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் நிறைவு செய்ய மணிரத்னம் திட்டமிட்டு அதற்கேற்ப அடுத்தடுத்த பிளான்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வரும் செப்டம்பர் 22ம் தேதியுடன் சிம்புவின் போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஆன்மீக சுற்றுப்பயணத்தில் சிம்பு ஏறக்குறைய ஒரு மாத காலங்கள் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அவர் இது போன்றதொரு பயணத்தை விடிவி கணேஷுடன் இணைந்து மேற்கொண்ட நிலையில் தற்போது தனியாகவே அவர் ஆன்மீக சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளார்.

இமயமலை செல்லும் சிம்பு: நடிகர் ரஜினிகாந்தை போல இமயமலை உள்ளிட்ட இடங்களுக்கு சிம்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் களமிறங்கி வருகிறார் சிம்பு. தக் லைஃப் படத்திற்கு அவர் நீண்ட நாட்கள் கால்ஷீட் கொடுத்து தொடர்ந்து மிகுந்த கவனத்துடன் நடித்து வருகிறார். முன்னதாக அவர் இதுபோன்று தொடர்ந்து ஒரே படத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்ததில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிம்புவிடம் சமீப காலங்களில் மிக அதிகமான மாற்றங்கள் தென்படுவதாகவும் அவர் பக்குவப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் சிம்புவின் நடவடிக்கையில் மேலும் மாற்றங்களை நிகழ்த்தும் என்று கோலிவுட்டில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X