Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு... சிம்புவுக்கு ஏன் ‘இந்த’ வேண்டாத வம்பு?
மாநாடு படத்தில் பொல்லாத அரசியல்வாதியாக சிம்பு நடிக்கிறார்.
Recommended Video
சென்னை: மாநாடு படத்தில் சிம்பு பொல்லாத அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு. இது அரசியல் கதைக்களம் கொண்ட படம் என அதன் போஸ்டர் மூலம் உறுதியானது.
ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்து வரும் நிலையில், சிம்புவின் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அஜித் மாதிரி:
இந்நிலையில், தற்போது இப்படத்தில் சிம்பு நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெங்கட்பிரபு தான் இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித்தை வித்தியாசமான கெட்டவன் ரோலில் காட்டியிருந்தார்.
அரசியல் படம்:
அதேபோல், மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரமும் முற்றிலும் கெட்டவனாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் படம் முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவுள்ளது.
கை நிறைய படங்கள்:
காதல் சர்ச்சை, ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியதால், திரையுலகில் சிம்புவிற்கு கெட்டப் பெயர் ஏற்பட்டது. இதனால் அவரது பட வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டது. தற்போது தான் தன் மீதான கெட்டப் பெயர்களை மாற்றி நல்ல பிள்ளையாக மாறியுள்ளார் சிம்பு. இதனால் தற்போது அவர் வசம் நான்கு படங்கள் உள்ளன.
ரசிகர்கள் சந்தேகம்:
இந்த சூழ்நிலையில் இது போன்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பது சரி தானா என்ற கேள்வியும் அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால், மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் நிச்சயம் இளைஞர்களைக் கவரும் வகையில் இருக்கும் என்கிறது படக்குழு.