“பீப் பாடல்“ வழக்கு… சிம்பு மீது போடப்பட்ட வழக்கு ரத்து !
சென்னை : பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை காவல்துறையில் பதிவான வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் சாங் ஒன்று வெளியானது. இதனை தொடர்ந்து பாடல் படிய சிம்பு மற்றும் இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனை தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

தனக்கு எதிராக இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கையில், சிம்புக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என கூறி ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னை காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும் படி உத்தரவிட்டிலிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையில், நடிகர் சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. அந்த அறிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதியபட்ட வழக்கையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











