ஸ்மார்ட்டாக மாறிய சிம்பு... புகைப்படங்கள் வெளியிட்டு உற்சாகம்

சென்னை : நடிகர் சிம்பு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Recommended Video

பிரச்சனைய நான் பாத்துக்குறேன்! என்ன நீங்க பாத்துக்கோங்க! | STR emotional Speech | Maanadu PreRelease

அவரது நடிப்பில் வரும் 25ம் தேதி மாநாடு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது தனது ஸ்மார்ட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வந்த ஈஸ்வரன் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. படத்தில் கிராமத்து கெட்டப்பில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் சிம்பு.

மாநாடு படம்

மாநாடு படம்

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள மாநாடு படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

டைம் லூப் படம்

டைம் லூப் படம்

தீபாவளிக்கே ரிலீசாக இருந்த இந்தப்படம் அதிலிருந்து பின்வாங்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, எஸ்ஜே சூர்யா மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் படம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அழகான சிம்பு

அழகான சிம்பு

இந்தப் படத்தில் சிம்பு தன்னுடைய உடலை குறைத்துக் கொண்டு அழகாக காட்சியளிக்கிறார். அவரது ரசிகர்களுக்கு இந்த விஷயம் உற்சாகத்தை தந்துள்ளது. படத்தின் பாடல் வெளியிடப்பட்டு, அதிலும் சிம்பு மிகவும் அழகாக காணப்படுகிறார். சிறப்பான நடனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்டைலிஷ் புகைப்படங்கள்

ஸ்டைலிஷ் புகைப்படங்கள்

இந்நிலையில் தற்போது அவரது ஸ்டைலிஷ்ஷான புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நீல நிற சட்டையில் அவர் இந்தப் புகைப்படங்களில் அழகாக காணப்படுகிறார். அவரது ரசிகர்கள் இதன்மூலம் உற்சாகம் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X