ரஜினி டயலாக்குடன்.. மட்டமல்லாக்க படுத்திருக்கும் போட்டோவை போட்ட சிம்பு.. பீலாகும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் சிம்பு ரஜினிகாந்த் டயலாக்குடன் மல்லாக்க பார்த்தப்படி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஃபீலாகியுள்ளனர்.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

பல முகங்களை கொண்ட சிம்பு

பல முகங்களை கொண்ட சிம்பு

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சிம்பு. பல வெற்றி படங்களை கொடுத்துள்ள சிம்பு, நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்

சிம்பு பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அதற்கு முந்தைய படங்களில் வெயிட் கூடி இருந்த சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக அதிகளவு எடையை குறைத்தார். மீண்டும் பழைய சிம்புவை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவன் போல்

பத்தாம் வகுப்பு மாணவன் போல்

அதனை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போட்டோக்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியது. காரணம் கடுமையாக உடற்பயிற்சி செய்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரின் தோற்றத்தில் இருந்தார் சிம்பு.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

எதற்கு இந்த வேண்டாத வேலை?

எதற்கு இந்த வேண்டாத வேலை?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சனிக்கிழமை வெளியானது. இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள், எதற்கு இந்த வேண்டாத வேலை என கேட்டு வந்தனர். இந்நிலையில் நடிகர் சிம்பு டிவிட்டரில் ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைக்கு பின்னால் கை வைத்து

தலைக்கு பின்னால் கை வைத்து

அதாவது, சேரில் சாய்ந்தப்படி தலைக்கு பின்னால் கை வைத்து படுத்துள்ளார் சிம்பு. இந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சிம்பு எல்லாம் மாயை என ரஜினி டயலாக்கை பேசி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் தலைவருடன் போட்டி போட்டு விட்டு அவர் டயலாக்கையே யூஸ் பண்ணுகிறீர்களே என கேட்டு வருகின்றனர்.

ஒரே ராஜா தான்..

ஒரே ராஜா தான்..

சிம்புவின் பதிவை பார்த்த இந்த ரசிகர் மொத்த வித்தையையும் ஒத்த மனுஷன் கத்துக்கிட்டு வச்சி இரக்கிறான் அப்போ உள்ள அரசனா இருக்கணும் .... இல்லையா இப்ப உள்ள சிலம்பரசனா இருக்கணும் .....

ஒரே ராஜா தான் அது #சிலம்பரசன்தேசிங்குராஜா தான்
ஒரேதலைவன் எஸ்டிஆர்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: simbu சிம்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X