Simbu: ஸ்டைலிஷ் லுக்கில் சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. STR48 அப்டேட் கேட்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சிம்பு அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றிப்படங்களாக மாறியுள்ளன.

இந்நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR48 படத்தில் இணையவுள்ளார் சிம்பு.

Actor Simbu shares his latest clicks in Instagram

சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்: நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய தந்தை டிஆர் இயக்கத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து சிறுவனாகவும் இளைஞனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சிம்பு, இயக்குநராகவும் தன்னை மன்மதன் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார். மேலும் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் சிம்பு. சிறிய வயதிலேயே ஏராளமான படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சிம்புவிற்கு சில படங்கள் கைக்கொடுக்காத நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் வெற்றிப்படமாக அமைந்தது. டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக இணைந்திருந்தார். சிக்கலான இந்தப் படத்தின் திரைக்கதையை கவனமாக கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. வித்தியாசமான முயற்சியாக எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் வெளியானது வெந்து தணிந்தது காடு படம். படத்தில் சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படமும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்து தல படம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் சிம்புவுடன் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

Actor Simbu shares his latest clicks in Instagram

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் அடுத்ததாக STR48 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவுள்ளார். வரலாற்று பின்னணியில் எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் சிம்பு.

மேலும் இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடியை வளர்த்து ஸ்டைலாக மாறியுள்ளார். பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இவரை இந்த லுக்கில்தான் பார்க்க முடிந்தது. இதனிடையே வரலாற்று பின்னணில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனும் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய க்ளிக்ஸ்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிம்பு. படங்கள் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக அமைந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X