Don't Miss!
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கூலிங் கிளாஸ்.. ப்ளாக் ஜாக்கெட்.. இணையத்தை கலக்கிய சிம்புவின் மாஸ் போட்டோஷூட் !
சென்னை : நடிகர் சிம்பு கூலிங் கிளாஸ்.. ப்ளாக் ஜாக்கெட்டுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.
டைம் லூப் என்ற வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் வெங்கட்பிரபு, இத்திரைப்படம் சிம்புக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.
சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
“டான்“ புளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்… கடுப்பான நெட்டிசன்ஸ்!

வெந்து தணிந்தது காடு
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு சிம்பு மற்றும் கெளதம் மேனன் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

பத்து தல
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் பத்து தல படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சில்லுன்னு ஒரு காதல் புகழ் ஓபேலி கிருஷ்ணா இயக்குகிறார். கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற முப்தி படத்தின் ரீமேக்கே தமிழில் பத்து தல ஆகும். இப்படத்தை கன்னடத்தில் அறிமுக இயக்குனர் நார்த்தன் இயக்கியிருந்தார்.

கேங்ஸ்டார் சிம்பு
இப்படத்தில் கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும், சிம்பு கேங்ஸ்டராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் ஊரடங்கு விலகியதும் கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. இன்னும் சிம்புவின் காட்சிகள் மற்றும் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் சிம்புவின் காட்சிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற மே 27-ஆம் தேதி தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

கூலிங் கிளாஸ்.. ப்ளாக் ஜாக்கெட்
இந்நிலையில், லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள சிம்பு, அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் கூலிங் கிளாஸ்.. ப்ளாக் ஜாக்கெட்... ஒயிட் ஷூவுடன் மாஸ் போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிம்புவின் தீவிர ரசிகைகள் புகைப்படத்தை பார்த்து பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.