Simbu: கலக்கல் லுக்கில் சிம்பு.. யங் & எனர்ஜிட்டிக் சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்!
சென்னை: நடிகர் சிம்புவின் பத்து தல படம் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்தது. இந்தப் படத்தில் ஜோடியில்லாமல் நடித்திருந்தார் சிம்பு.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய STR48 படத்தில் இணையவுள்ளார் சிம்பு. கமல்ஹாசன் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது. STR48 படத்தில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ளது.

லண்டன் வீதிகளில் கலக்கல் க்ளிக்ஸ் எடுத்த சிம்பு: நடிகர் சிம்பு அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். அவரது தேர்ந்த நடிப்பு சமீபத்திய அவரது திரைப்படங்களில் அதிகமாகவே காணப்படுகிறது. மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சிம்பு அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் STR48 படத்தில் இணையவுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விரைவில் சூட்டிங் துவங்கவுள்ள STR48 படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்காக வெளிநாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியை மேற்கொண்ட சிம்பு, தன்னுடைய உடல் எடையையும் கணிசமாக குறைத்து சிறப்பான பிட்னசுடன் காணப்படுகிறார். இந்தப் படத்தில் போர்க்காட்சிகளும் அதிகமாக காணப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் நடிகர் கமல்ஹாசனும் மிகவும் வெயிட்டான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடி மீசை சகிதம் காணப்படுகிறார். இந்த கெட்டப்பிலேயே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் அவரை காண முடிகிறது. முன்னதாக பத்து தல இசை வெளியீட்டிலும் அவர் இந்த கெட்டப்பிலேயே காணப்பட்டார். இந்நிலையில் தற்போது சிம்புவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. இதில் ஸ்டைலிஷ்ஷான கூலர்ஸ் மற்றும் தொப்பியுடன் சிம்பு காணப்படுகிறார்.
சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். தற்போது லண்டனில் உள்ள சிம்புவின் இந்தப் புகைப்படங்கள் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக லண்டன் வீதிகளில் எடுக்கப்பட்டுள்ளன. STR48 படத்திற்காக தற்போது லுக் டெஸ்ட்டையும் எடுத்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பத்து தல படத்தில் கேங்ஸ்டராக நடித்திருந்தார் சிம்பு. இந்தப் படத்தில் ஜோடியில்லாமல் நடித்திருந்தார். கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஜோடி இந்தப் படத்தில் தனிக்கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள STR48 படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள அவருக்கு யார் ஜோடியாவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











