Actor Simbu: இன்று வெளியாகும் STR49 பட அறிவிப்பு.. கெட்டப்பை மாத்துவாரா சிம்பு!
சென்னை: நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நீண்ட தலைமுடியுடன் அவரது கெட்டப் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக அவர் நடித்துள்ளதாகவும் படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகவும் நடிகை திரிஷா சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்தப் படத்தில் நடிகர் சிம்பு இணையவுள்ளார் என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பட்டிமன்றம் நடத்தவும் தயாரான நிலையில், அவரது அடுத்தப்படமாக உருவாகவுள்ள எஸ்டிஆர் 49 படம் குறித்து இன்று மாலை அறிவிக்கவுள்ளதாக அவர் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் குறிப்பிட்டு வருகிறார்.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக, சிறுவனாக, நாயகனாக நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். தற்போது 40 வயதாகும் சிம்பு, தொடர்ந்து நாயகனாக தொடர்ந்து வருகிறார். தன்னுடைய ரீ என்ட்ரியை பலமாக்கிய சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது எஸ்டிஆர் 48 படத்தில் அவர் இணையவிருந்தார். வரலாற்று பின்னணியில் உருவாகவிருந்த இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடியை வளர்த்திருந்த சிம்பு, மார்ஷியல் ஆர்ட்சையும் வெளிநாடுகளில் பயின்று வந்தார்.
தக் லைஃப் படம்: இந்நிலையில் தற்போது எஸ்டிஆர் 48 படம் குறித்து பல கருத்துக்கள் இணையத்தில் உலவி வருகின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் எப்போது துவங்கப்படும், துவங்கப்படுமா என்பது குறித்து பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் நிலையில், தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்திலும் அவர் நீண்ட தலைமுடியுடனான கெட்டப்பிலேயே காணப்படுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்துள்ளார் சிம்பு. படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் திரிஷா.
சிம்புவின் புதிய படம்: இந்தப் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தன்னுடைய எஸ்டிஆர் 49 படம் குறித்த அறிவிப்பை மேற்கொள்ளவுள்ளார் சிம்பு. இந்தப் படம் ரொமாண்டிக் என்டர்டெயினராக உருவாகவுள்ளதாகவும் ஓ மை கடவுளே படத்தை இயக்கியிருந்த அஷ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் படத்தின் சூட்டிங் வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை அறிவிப்பு: இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 6.06 மணிக்கு வெளியாகவுள்ளதாக சிம்பு அறிவித்துள்ள நிலையில் இதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்திலும் தன்னுடைய ஹேர்ஸ்டைலை அப்படியே மெயின்டெயின் செய்வாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என 3 வித்தியாசமான கெட்டப்புகளில் சிம்பு தோன்றவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











