அவரை அப்செட் ஆக்கிடுச்சு.. இமான் அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள்.. ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இதனையடுத்து அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் இசையமைப்பாளர் டி.இமானிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

Sivakarthikeyan D Imman Amaran

அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி படத்திலும், வெங்கட் பிரபு படத்திலும் நடிக்கவிருக்கிறார் அவர்.

க்ளீன் பாய் இமேஜ்: கோலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு க்ளீன் பாய் என்ற இமேஜ் இருந்தது. ஆனால் இசையமைப்பாளர் டி.இமான் கடந்த வருடம் ஒரு பேட்டி அளித்தார். அதில், 'இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். அந்த துரோகம் குறித்து சிவகார்த்திகேயனிடமும் நான் நேராகவே கேட்டுவிட்டேன் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

என்ன பிரச்னை: இதனையடுத்து இமானுக்கு சிவகார்த்திகேயன் என்ன துரோகத்தை செய்திருப்பார் என்று பலரும் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். ஒருதரப்பினரோ இமானும் அவரது முதல் மனைவியான மோனிகாவும் பிரிவதற்கு சிவாதான் காரணமாக இருப்பார். அதைத்தான் இமான் சுற்றி வளைத்து சொல்கிறார் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்தார். அதுமட்டுமின்றி இது சிவகார்த்திகேயனுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்று எஸ்கே ரசிகர்களும் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

ட்ரெண்டாகும் பேட்டி: ஆனால் இந்த விவகாரம் குறித்து இதுவரை சிவகார்த்திகேயன் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் இமானிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்ட வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பழைய பேட்டி ஒன்றில், "நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அது இமான் அண்ணாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனெனில் நான் கொஞ்சம் படங்களில் பிஸியாக இருக்கிறேன். அதனால் அவரை பார்க்க முடியாமல், பேச முடியாமல் இருக்கிறது.

எப்போதும் பயம்: நாங்கள் இரு குடும்பமும் ஒன்றாக சாப்பிட போவோம். இப்போது அது நடப்பது இல்லை. நாங்கள் அவ்வாறு செல்லாதது இமான் அண்ணாவுக்கும் அப்செட் ஆக்கிடுச்சு. நான் அவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன். அவரும் என்னை தம்பி என்றுதான் கூப்பிடுவார். அது ஒரு ஜெனியூனான ரிலேஷன்ஷிப். எந்த ஒரு ஈகோவும் எங்களுக்குள் இருக்காது. அதேபோல் அவர் மீது எப்போதும் எனக்கு அண்ணன் என்ற ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் ஏதாவது ஒரு பாடலில் திருத்தம் சொன்னால்கூட நான் பயந்துகொண்டேதான் அவரிடம் சொல்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X