Sivakarthikeyan birthday: சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.. ட்ரெண்டிங்கில் ஹீரோ

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் ஆங்கராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கியவர். தன்னிடம் இருக்கும் மிமிக்ரி மற்றும் காமெடி திறமையால் மிகப்பெரிய உயரங்களை அவர் அடைந்துள்ளார். தனுஷின் 3 படத்தில் காமெடியனாக நடித்தபோது யார் இவர் என்று அனைத்து ரசிகர்களையும் கேட்க வைத்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி கலாட்டா செய்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய லெவலே வேற என்னும்படியாக அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். அந்த வகையில் மெரினா உள்ளிட்ட படங்கள் வெளியாகி அவரை சிறந்த ஹீரோவாக அறிமுகப்படுத்தின.

தொடர்ந்து காமெடி கலாட்டாவை ஹீரோவாகவே இருந்து செய்து வந்தார் சிவகார்த்திகேயன். காமெடி என்பது அனைவராலும் செய்ய முடியாது என்பதற்கிணங்க தன்னை சிறப்பான காமெடி ஹீரோவாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார். இந்தப் படங்களின் அதிரி புதிரி வெற்றி அவருக்கு அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கு காரணமாக அமைந்தன. தொடர்ந்து ஹன்சிகா, நயன்தாரா என முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்தார். முன்னணி இயக்குநர்களுடனும் இணைந்து அடுத்தடுத்த வெற்றிகளை குவித்தார். தயாரிப்பாராகவும் மிளிர்ந்தார்.

Actor Sivakarthikeyan celebrates his birthday today and wishes pours in social media

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் காமெடி ஷோக்களில் இணைந்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர். விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல படங்களின் இசை வெளியீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கேயுரிய தனிப்பட்ட காமெடி திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த, சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கதவைத்தட்டியது. தனுஷுடன் இணைந்து 3 படத்தில் காமெடியனாக களமிறங்கிய அவர், அடுத்தடுத்த சிறிய பட்ஜெட் படங்களில் ஹீரோவாகவும் நடிக்கத் துவங்கினார். இந்தப் படங்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து அவரது சினிமா பயணமே மிகப்பெரிய மாற்றத்தை பெற்றது.

அடுத்தடுத்த மாஸ் படங்கள்: அடுத்தடுத்து மான் கராத்தே, வேலைக்காரன் என முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படங்களில் இவரது ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என நவரச நடிப்பு ரசிகர்களை இவர்பக்கம் திருப்பியது. தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளையடுத்து தன்னுடைய சினிமா பயணத்தை காமெடியிலிருந்து ஆக்ஷன் பக்கம் திருப்பினார். அதிலும் இவருக்கு வெற்றியே கிடைத்தது. ஆனாலும் தனக்கு வாழ்க்கையை கொடுத்த காமெடியை விடாமல் பிடித்து வருகிறார். அதுதான் இவரது அடுத்தடுத்த வெற்றிகளுக்கு தொடர்ந்து காரணமாக அமைந்து வருகிறது.

தயாப்பாளராகவும் வெற்றி: அடுத்தடுத்து டாக்டர் மற்றும் டான் போன்ற படங்களின்மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இந்தப் படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியுள்ளன.தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இன்றைய தினம் இவரது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை இந்தப் படத்தின் டைட்டில் அமரன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மிரட்டலான டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: இன்றைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் #HBDSivakarthikeyan என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. அவர் முன்னதாக பணிபுரிந்த தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தற்போது பணியாற்றிவரும் நிறுவனங்களும் தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றன. சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அவரது அடுத்தடுத்த படங்களின் கோர்வையாக ஒரு வீடியோவையும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தயாரிப்பு நிறுவனங்கள் வாழ்த்து: அவரது இந்த வெற்றிப்பயணம் தொடர கேஜிஆர் ஸ்டூடியோஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. இதேபோல சன் பிக்சர்ஸ், சன் டிவி, சத்யஜோதி பிலிம்ஸ், சன் மியூசிக், பேஷன் ஸ்டூடியோஸ், லைகா புரொடக்ஷன்ஸ், சோனி மியூசிக் சவுத், ஸ்டூடியோ கிரீன் உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்களும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளன. அவருடன் இணைந்து நடித்துள்ள பாலா உள்ளிட்டவர்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளை சமுகவலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X