அடுத்தடுத்து 2 முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் இணைந்த சிவகார்த்திகேயன்.. அசத்தல் அப்டேட்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து டாப் நடிகராக உயர்ந்துள்ளார். அதோடு சினிமா ஆசையில் உள்ள பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஹீரோவாகவும் வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்திலும் ரவிக்குமார் இயக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திலும் நடித்துள்ளார்.

தள்ளி போகும் டாக்டர் ரிலீஸ்
டாக்டர் படம் கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் மற்றும் கொரோனா அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி போயுள்ளது. இந்நிலையில் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான்
சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

ஆணைமலை பகுதியில் படப்பிடிப்பு
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆணை மலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆணை மலை ஆற்றங்கரையோரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக படக்குழுவுக்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக தெலுங்கில் சிவகார்த்திகேயன்
அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு என்ற படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கு பட உலகிலும் மார்க்கெட் உள்ளதால் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.

முதல் முறையாக ரூ. 25 கோடி சம்பளம்
இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் முந்தைய படங்களில் ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்று வந்த நிலையில் முதல் முறையாக சிவ கார்த்திகேயன் 25 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பு
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அசோக் என்பவர் இயக்க இருப்பதாகவும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள்
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படமும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படமும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

அடுத்தடுத்து படங்கள் - ரசிகர்கள் மகிழ்ச்சி
அந்தப் படங்களின் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் கடன் தொல்லையில் சிக்கி தவித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











